பிரபல பாலிவுட் இயக்குநர் நிஷிகாந்த் காமத் ஆபத்தான நிலையில் உள்ளார், ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிஷிகாந்த் காமத் கடந்த காலங்களில் கல்லீரல் நோயால் அவதிப்பட்டதாகவும், அது மீண்டும் அதில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து உடனடி யாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். த்ரிஷ்யம், மாதாரி, மும்பை மேரி ஜான் போன்ற படங்கள் மூலம் காமத் புகழ் பெற்றவர்.
தவிர, சாட்சியா ஆத் காரத் போன்ற ஒரு சில மராத்தி படங்களிலும் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டில் மராத்தி திரைப்பட மான டோம்பிவலி ஃபாஸ்ட் மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறியது. இந்த படம் விமர்சனரீதியாகப் பாராட்டப் பட்டது மற்றும் 2006 இல் மராத்தியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதையும் பெற்றது.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் த்ரிஷ்யம் மற்றும் கமல் நடிப்பில் தமிழில் உருவான பாபநாசம் படங்கள் இங்கு வெற்று பெற்றது. இப்படத்தை 2015 இல் த்ரிஷ்யம் பெயரில் இந்தியில் ரீமேக் செய்து இயக்கினர் நிஷிகாந்த் காமத். இதில் அஜய் தேவ்கன், தபுவும் நடித்திருந்தனர், அப்படமும் வெற்றி பெற்றது. இப்படம் சில நாட்களுக்கு முன்பு ஐந்து வருடங்கள் நிறைவைக் கொண்டாடியது. அதற்காக தபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக் கூறியிருந்தார்.
.2016 ஆம் ஆண்டில் வெளியான ஜான் ஆபிரகாம் நடித்த ராக்கி ஹேண்ட்சம் படத்தில் நிஷிகாந்த் நிஷிகாந்த் காமத் வில்லன் வேடத்தில் நடித்தார். அது தவிர, பவேஷ் ஜோஷி சூப்பர் ஹீரோ, ஃபுகே மற்றும் ஜூலி 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இது 2022 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.