மூச்சு திணறலால் பாதித்த பிரபல நடிகர் நடிப்பிலிருந்து விலகல்..

by Chandru, Aug 12, 2020, 11:39 AM IST

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சில தினங்களுக்கு முன் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு மும்பை மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது. ஆனாலும் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மூச்சு திணறலுக்கு தீவிர சிகிச்சை அளித்ததில் அவர் குணம் அடைந்து 2 நாட்களில் வீடு திரும்பினார்.

மருத்துவமனையிலிருந்து உற்சாகமாக சஞ்சய் தத் வீடு திரும்பியதை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் ஒரு மெசேஜ் பகிர்ந்தார். அதில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டி இருப் பதால் சில காலத்துக்கு தற்காலிகமக நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளேன்.

எனது குடும்பத்தினர், நண்பர்கள் எனது நல விரும்பிகள் யாரும் இதற்காக கவலைப்பட வேண்டாம். தேவையில் லாமல் எந்த குழப்பத்துக்கும் ஆளாக வேண்டாம். உங்களின் அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் மீண்டும் திரும்பு வருவேன் என தெரிவித்திருக்கிறார்.
நடிப்பிலிருந்து சில காலம் ஒதுங்கி இருக்கப்போவதாக சஞ்சய் தத் அறிவித் திருப்பது அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உடல் நலம் ஆன் பிறகு மீண்டும் எதற்கு சிகிச்சை பெறுகிறார் என்று குழப்பம் அடைந்துள்ளனர். அதுபற்றிவிசாரித்தபோது மேலும் அதிர்ச்சி தரும் மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.

கொரோனா டெஸ்ட் செய்யச் சென்ற போது அவருக்கு நுரையீரல் கேன்சர் 3ம் கட்டத்தில் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து சஞ்சய் தத் கேன்சர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விருக்கிறார். அங்குள்ள மருத்துவமனை யில் குறிப்பிட்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை