இதுவரை யாரும் அறிந்திராத வேதனையை கடக்கும் மக்கள்.. மம்மூட்டி கண்முன் தெரிந்த ஒளிக்கீற்று

by Chandru, Aug 12, 2020, 18:51 PM IST

கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் இன்னும் தனது கோரத் தாண்டவத்தை ஆடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் நோய்த் தொற்று லட்சங்களைக் கடந்து கோடிக்குச் சென்றுவிட்டது. ஆனால் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே வாராமலிருந்தால் தொற்று வராது என்றார்கள் அதற்காகச் சொன்ன விதிமுறைகளை கடைப்பிடித்து வீட்டுக்குள் இருந்த விஐபிகளுக்கு வீட்டுக்குள்ளேயே புகுந்து நோய் தொற்றி இருக்கிறது.

கேரளாவில் இந்த சோகம் ஒருபக்கம் நிகழும் நிலையில் மண்சரிவு, விமான விபத்து என எதிர்பாராத அச்சுறுத்தல்கள் அம்மாநில மக்களைச் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த சோதனைகளின் நடுவில் ஒரு ஒளிக்கீற்று தெரிவதாக நடிகர் மம்மூட்டி கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:இதுவரை நம்மில் யாரும் அறிந்திருக்காத அல்லது இதற்கு முன்பு அனுபவிக்காத வேதனையான தருணத்தை இந்த உலகம் கடந்து செல்கிறது, கேரளாவைப் பொருத்தவரை, சவால்கள் கடுமையானவையாக உள்ளன. ஒருபக்கம் வெள்ளம், மறுபக்கம் நிலச்சரிவு, விமான விபத்து போன்ற சோகங்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன.

அந்த வேதனையிலும் ஒரு ஒளிக் கீற்று மனிதாபிமான வடிவில் தெரிகிறது இது மக்களின் நம்பிக்கையின் ஒளி இன்னும் அணைக்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.எந்தவொரு ஆபத்தானாலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும் காப்பாற்றுபவர்களாகவும் இருப்பார்கள் என்பதை வலுப்படுத்தும் விதமாகப் பல சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கிறது.மக்கள் தங்கள் துணிச்சலான மற்றும் தன்னல மற்ற செயல் கண்முன் அதற்குச் சாட்சிகளாகக் காணப்படுகிறது. இந்த இருண்ட காலங்களில் மக்களின் அன்பை ஒளிரும் விளக்காகக் கொண்டு எழுவோம்.

இவ்வாறு மம்மூட்டி கூறியிருக்கிறார்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை