கார்கில் போர் படத்தில் நடித்த நடிகைக்கு இந்திய விமான படை எதிர்ப்பு.. முதலில் அந்த காட்சியை வெட்டுங்கள்..

by Chandru, Aug 14, 2020, 10:08 AM IST

ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள படம் 'குஞ்சன் சக்சேனா'. இந்திய விமானப் படையில் இடம்பெற்ற முதல் பெண் விமானி குஞ்சன் சக்சேனா ஆவார். இவர் 1999ம் ஆண்டு நடந்த கார்கில் போரில் பங்கேற்றவர். அவரது வாழ்கையைத் தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் சமீபத்தில் நெட்ஃபிக்ஸ் இல் வெளியிடப்பட்டது சில விமர்சனங்களையும் மீறி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது நெட்ஃபிக்ஸில் பிரபலமாக இருக்கும் முதல் 10 இந்தியப் படங்களில் ஒன்றாக இப்படம் இடம் பிடித்திருப்பதில் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

ஆனால் இந்திய விமானப்படை இந்த படம் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர், நெட்ஃபிக்ஸ் மற்றும் மத்திய தணிக்கை குழு தங்கள் அதிகாரிகளை மோசமான முறையில் காட்டும் காட்சிகளை நீக்குமாறு கூறி உள்ளது. அந்த காட்சிகள் இந்திய விமானப்படை பற்றிய தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பும் என்று கூறி இருக்கின்றனர்.கதைப்படி ஜான்வி கதாபாத்திரம் விமானப் படையில் பயிற்சி பெறும்போது அதிகாரகள் மற்றும் இணை விமானிகளால் அவமதிக்கப்படுவதுபோல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் இந்திய விமானப்படையை வருத்தப்படுத்தியதாகவும், அவற்றை உடனடியாக நீக்கு மாறும் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை