``தலைவனையும்,தலைவன் படத்தையும் பாக்காமலே போறேன் -விஜய் ரசிகரின் அதிர்ச்சி அளிக்கும் முடிவு

by Sasitharan, Aug 14, 2020, 17:18 PM IST

விஜய் ரசிகர்கள் மத்தியில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக உச்சரிக்கப்படும் பெயர் பாலா. இந்தப் பாலா விஜய்யின் தீவிர ரசிகர். சமீபத்தில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சில டுவீட்களை பதிவிட்டிருந்தார். ``ஒரு மனுஷன் எவ்ளோ வலி தான் தாங்குவான் என் வாழ்க்கை புல்லா இழப்புகள் மட்டும்தான் இருக்கு.ஒவ்வொரு தடவையும் அந்த வலியோட ஓவர்கம் பண்ணி வந்துட்டுத்தான் இருக்கேன் ஆனா இப்போ உனக்குச் சந்தோஷமே கிடையாதுடான்னு கடவுள் நெனச்சிட்டான் போல. கண்ணுல இருந்து தண்ணி அதுவா வருது உள்ள எவ்ளோ வலி இருக்குனு அப்போதான் எனக்கே தெரியுது.

கடைசியில் நானும் இப்புடி புலம்ப ஆரமிச்சிட்டேன். எதுக்கு பொறக்கணும் ,யாருக்காக நாம வாழனும், அப்போ அப்போ சந்தோஷத்தைக் கொடுத்து பரிச்சிகிட்டே இருக்கான் அந்த கடவுள் இதுக்கு மேல என்னால முடியாதுடா. மொத்தமா போயிடரேன் அப்போவாது எந்த கவலையும் இல்லாம இருக்கலாம்." இப்படிப் புலம்பிக் கொண்டிருந்தார்.இவரின் புலம்பலைப் பார்த்த சிலர் இவருக்கு லவ் பெயிலியர் எனக் கூறினர். ஆனால் ``நீங்க நெனைக்கிற மாறி லவ் பெயிலியர் எனக்கு இல்லை வீட்ல பிரச்சனை அதான். என்னை எல்லாரும் வெறுக்குறாங்க" என்று அதற்கும் முற்றுப் புள்ளி வைத்தவர், அதற்கு அடுத்ததாக, ``தலைவன் படம் பாக்கமலே போறேன். தலைவனையும் "லவ் யூ தலைவா " என்று பதிவிட்டார்.

ஆம்.. எல்லோரும் நினைத்தபடி அவர் கடுமையான மன அழுத்தத்தினால் தற்கொலை செய்துகொண்டார். இதையும் டுவிட்டர் வாசிகள் பாலாவின் சகோதரனைப் பிடித்து உறுதிப்படுத்தினர்.கடுமையான மன அழுத்தத்தினால் இந்த முடிவைப் பாலா எடுத்தாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அவரது இறுதிச் சடங்கு நடப்பதை அடுத்து விஜய் ரசிகர்கள் பாலாவின் பெயரை டுவிட்டரில் ட்ரெண்டிங் செய்தனர். கிட்டத்தட்ட 65 ஆயிரம் பேர், பாலாவுக்கு இரங்கல் தெரிவித்தும், அவருக்கு ஆதரவாகவும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை