விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தவிக்கும் விஜய் ஹீரோயின்.. காதலனை துரத்திவிட்டு தினமும் செல்ஃபி கவர்ச்சி படம் பகிர்கிறார்..

by Chandru, Aug 15, 2020, 11:00 AM IST

நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் இலியானா. முன்னதாக இவர் கேடி என்ற படத்தில் தமிழில் அறிமுகமானார். இதற்கிடையில் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடித்தார். டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் அவருக்கு யாரோ பாலிவுட் ஆசை காட்ட 2012 ம் ஆண்டு தமிழ், தெலுங்கு படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு இந்தியில் நடிக்கச் சென்றார். ரன்பீர் கபூருடன் நடித்த பர்பி படம் சூப்பர் ஹிட் ஆனது.

முதல் படமே ஹிட்டானதால் அடுத்தடுத்து இந்தியில் படம் வந்தது. இதையடுத்து மும்பையிலேயே செட்டிலானார். அதன்பிறகு தென்னிந்தியப் படங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் தவிரப் பிற நடிகர், நடிகைகளுக்கு அங்கு வாய்ப்பு கிடைக்காது என்ற உண்மை சுஷாந்த் மறைவுக்குப் பிறகு தற்போது தெரிய வந்திருக்கிறது. அது தெரியாமலே இலியானாவும் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வந்த வாய்ப்பெல்லாம் வெறும் சொத்தையாக இருந்தது. எவ்வளவு வேகமாக முதல் படத்தில் ஜெயித்தாரோ அதே வேகத்தில் வீழ்ச்சி அடைந்தார். அவருக்கு இந்தியில் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்பு வரவில்லை.

ஸ்ரீதேவிபோல் பாலிவுட்டில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்து விடலாம் என்று ஆசை ஆசையாகச் சென்ற இலியானாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதன்பிறகு பொழுது போகாமல் டேட்டிங் செய்ய ஆரம்பித்தார். ஆஸ்திரேலியா போட்டோ கிராபர் ஆண்ட்ரு நீபோன் உடன் வருடக் கணக்கில் சுற்றினார். அவரை வைத்து தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்புக்கு வலை வீசினார். ஒன்றும் கைகொடுக்கவில்லை. இந்நிலையில் ஆண்ட்ருவுடனா காதலை பிரேக்அப் செய்து கொண்டு அவரை ஆஸ்திரேலியாவுக்கே திருப்பி அனுப்பினார்.மீண்டும் தென்னிந்தியப் படத்தில் வாய்ப்பு வலை வீசினார் இலியானா. ஆனால் அவர் பாலிவுட்டில் கவனம் செலுத்திய நேரத்தில் இங்குப் பல நடிகைகள் டாப் இடத்துக்கு வந்ததால் இலியானாவின் முயற்சி எடுபடவில்லை. பல இயக்குனர்களுடன் அவர் நேரடியாகப் பேசியதில் அமர் அக்பர் ஆண்டனி தெலுங்கு படத்தில் நடிக்கக் கடந்த 2018 ஆண்டு வாய்ப்பு கிடைத்தது அப்படம் தோல்வி அடைந்தது.

2020ம் ஆண்டில் கவர்ச்சியாக நடிக்கும் புதிய பாலிசியுடன் களம் இறங்கினார் இலியானா. ஆனால் கொரோனா லாக் டவுன் அவரது கனவைக் கலைத்து விட்டது. லாக்டவுனில் உடல் எடை பெருகி விடக் கூடாது என்பதற்காகக் கடுமையான பயிற்சிகள் செய்து பழைய தோற்றத்துக்கு உடலை ஸ்லிம்மாக்கி இருக்கிறார். அதை இயக்குனர்கள் கண்களுக்குப்படும் படி இறுக்கமான உடை அணிந்து டாப் ஆங்கிளில் படம் எடுத்து தினமும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அவரது படங்களை இயக்குனர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ ரசிகர்கள் தங்களுக்குக் கிடைக்கும் கவர்ச்சி விருந்தாக எண்ணி அவரை புகழ்ந்து கமெண்ட் பகிர்ந்து வருகின்றனர்.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை