மருத்துவமனையிலிருந்தாலும் சுதந்திர தினத்தில் ஒலிக்கும் எஸ்.பி.பி.யின் குரல்.. ரஹ்மான், மோகன்லால், ராம்சரண் ரிலீஸ் செய்தனர்..

by Chandru, Aug 15, 2020, 16:21 PM IST

தமிழா தமிழா நாளை நம் நாளே என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ரோஜா படத்தில் பாடகர் ஹரிஹரன் பாடிய இந்திய உணர்வும், தமிழ் மொழி உணர்வும் இணைந்து ததும்பும் அருமையான பாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.இந்தப் பாடல் வெளிவந்தது 1992 ஆம் ஆண்டில். அதன் பிறகு மீண்டும் சுதந்திர தினத்தில் இன்று வெளியாகிற அதே பாடலைப் பல மொழிகளில் 65 முன்னணிப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். அபூர்வ இசைக்கலவையாக உருவாகியிருக்கிற இந்தப் பாடலின் முதல்வரியான தமிழா தமிழா நாளை நம் நாளே என்ற வரியை தன்னுடைய இளம் குரலால் முதலில் பாடியிருக்கிறார் பல சாதனைகளைப் படைத்த பாடகரான எஸ்.பி.பால சுப்பிரமணியம். கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்தாலும் இன்று சுதந்திர நாளில் அவரின் குரல் ஒலிக்காத இடம் இல்லை என்றவில் இன்றைக்குத் தமிழா தமிழா பாடல் மூலம் இந்தியாவையும் கடந்து உலகம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கி உள்ளது.

1992 ஆம் ஆண்டில் இந்த பாடலைப் பாடிய பாடகர் ஹரிஹரனும் மீண்டும் இந்தப் பாடலில் பாடி இணைந்திருப்பது சிறப்பு. யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் புதிய முயற்சியாக டுகெதர் நெஸ் ஒன் என்ற தலைப்பில் இன்று வெளியாகி உள்ள இசைத் தொகுப்பை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் கன்னட நடிகர் யாஷ் ஆகியோர் வெளியிட்டு இருக்கிறார்கள்.பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிப் பல தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிற மூத்த பாடகரான எஸ்.பி.பால சுப்பிரமணியம் பாடித் துவங்கியிருக்கும் இந்தப் பாடல் அவருடைய கோடிக் கணக்கான ரசிகர்களை உற்சாகப்படுத்தும். மறுபடியும் அவருடைய மகத்தான குரலை உலக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும்.மூத்த இசைக்கலைஞரான எஸ்.பி.பால சுப்பிரமணியத்தின் குரல் என்றும் இதமானபடி நம் தேசத்தின் குரலாக ஒலிக்கட்டும். அவருடைய ரசிகர்கள் இந்தப் பாடலை உலகமெங்கும் கொண்டுபோய்ச் சேர்க்கட்டும்!

யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னணி பாடகர் ஶ்ரீநிவாஸால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இதில் இவருடன் இணைந்து பாடகர்கள் உன்னிகிருஷ்ணன் , சுஜாதா மோகன் , ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த் அறங்காவலர்களாக பொறுப்பேற்கிறார்கள். இந்த ஊரடங்கு சமயத்தில் வாழ்வாதாரத்திற்காக கஷ்டப்படும் பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களுக்கு நிதி திரட்டி உதவுவதே இந்த அமைப்பின் நோக்கம். யூஎஸ்சிட் (USCT) செப்டம்பர் மாதத்தில் உலக அளவில் நிதி திரட்டுவதற்காக ஆன்லைனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்த உள்ளது."டுகெதர் அஸ் ஒன்" பாடல் ஸ்ரீனிவாசுடன் இணைந்து ராகுல் நம்பியார் மற்றும் ஆலாப் ராஜுவால் வடிவமைக்கப்பட்டு வீடியோ லிட்டில் பாக்ஸ் மீடியா பேக்டரியால் (LitBox Media Factory)தொகுக்கப்பட்டுள்ளது.இஷிஹிட் குபேர்கர் (Ishit Kuberkar) இந்த பாடலை மிக்ஸிங் அண்ட் மாஸ்டரிங் (mixing and Mastering) செய்திருக்கிறார் மற்றும் பாடல் வெளியீட்டை ஒருங்கிணைத்து தருவது சில்வ ட்ரீ லேலென் மேனேஜ்மெண்ட் சென்னை. சில்வட் ட்ரீ கம்பெனி பிரசித்தி பெற்ற கலைஞர்களை மற்றும் திறமை வாய்ந்தவர்களை உலக அளவில் முக்கிய நிகழ்வுகளில் இணைத்திருக்கிறார்கள்.

பாடல் இணைப்பு லிங்க்: bit.ly/TAOSongVideo

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை