மலையாளத்தில் மோகன்லால் நடித்து திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் த்ரிஷ்யம். இப்படம் தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் பெயரில் ரீமேக் ஆனது, அதுவும் வெற்றி பெற்றது. அதே படத்தை இந்தியில் அஜய் தேவ்கன் நடிக்க 'த்ரிஷ்யம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அப்படம் வரவேற்பைப் பெற்றது. இந்தி த்ரிஷ்யம் படத்தை நிஷிகாந்த் காமத் இயக்கினார். தொடர்ந்து 'ஃபோர்ஸ்', 'ராக்கி ஹேண்ட்ஸம்' இயக்கினார். அடுத்தடுத்த படங்களுக்கு நிஷிகாந்த் திட்டமிட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கல்லீரல் பிரச்சனையால் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.இந்நிலையில் இன்று காலை முதல் நிஷிகாந்த் காமத் உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலக பிரபலங்கள் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்தார்கள். ஆனால் நிஷிகாந்த் தீவிர சிகிச்சையில் இருப்பதாக நடிகர் ரிதேஷ் தேஷ்முக் தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் நிஷிகாந்த் காமத் உடல்நிலை குறித்து ரிதேஷ் தேஷ்முக் தனது டிவிட்டர் பக்கத்தில், நிஷிகாந்த் காமத் செயற்கை சுவாச உதவியோடு இருக்கிறார். இன்னும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்காகப் பிரார்த்திப்போம் எனத் தெரிவித்திருக்கிறார்.