கொரோனா ஊரடங்கால் மூடிக்கிடந்த மதுக்கடைகளைச் சென்னையில் இன்று முதல் அரசு திறக்கிறது. குடிமகன்கள் கொண்டாட்டத்தில் மிதக்கின்றனர். கொரோனா தொற்று பாதிக்காமல் இருக்க வரிசையாக சமூக இடைவெளிவிட்டு நிற்கச் சவுக்கு கட்டைகள் கட்டி ஏற்பாடு செய்துள்ளனர்.கடந்த காலங்களில் பாடகி சுமத்ரா சுசிலீக் என்ற பெயரில் சில நடிகர், நடிகைகளின் அந்தரங்க லீலைகளை அடுத்தடுத்து வீடியோவாகவும், புகைப் படங்களாகவும் வெளியிட்டு வந்தார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அதுபற்றி அவரது கணவர் கார்த்திக் விளக்கம் அளிக்கும்போது, சுசி மன அழுத்தில் இருப்பதால் இது போல் செய்திருக்கிறார் என்றார். அதன்பிறகு பல மாதம் சுசித்ரா பற்றி எந்த தகவலும் இல்லை. அவர் மன அழுத்தத்திற்குச் சிகிச்சை எடுத்து வந்ததாக கூறப்பட்டது.
சமீபத்தில் சாத்தான்குளத்தில் தந்தை. மகன் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் அது பற்றி விளக்கி வீடியோ வெளியிட்டார் சுசி. அது வைரலானது. பிறகு போலீஸ் தரப்பிலிருந்து தரப்பட்ட அழுத்தத்தால் அந்த வீடியோவை நீக்கினார்.
இந்நிலையில் இன்று சாராய கடைகள் சென்னையில் திறக்கப்படுவது பற்றி வெளியிட்ட வீடியோவில், காதலா காதலா படத்தில் கமல்ஹாசன் பாடிய, காசு மேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது பாடல் பாணியில், நாக்கு மேல நாக்கு வந்து சொட்டுகிற நேரமிது
வாசக் கதவ ராசலட்சுமி தட்டுகிற நேரமிது என்ற பாடலை சுசி பாடியிருப்பதுடன் பின்னணியில் மது பாட்டில்கள், கூல் டிரிங்க்ஸ், சிப்ஸ் பாக்கெட்டுகள் அடுக்கி வைத்துப் பகிர்ந்திருக்கிறார்.