விஜய் பட கிளிப்பிங்ஸ் வெளியிட்டு ரசிகர்களுக்கு திரிஷா போட்ட கண்டிஷன்.. எல்லா சமயத்திலும் கார பூரி கேட்கக்கூடாது..

நடிகை திரிஷாவிடம் சமீபகாலமாக பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன. சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருப்பவர் அதனைக் குறைத்துக் கொண்டதுடன் கடந்த மாதங்களில் திடீரென்று ஒருநாள் சமூக வலைத்தள கணக்கிலிருந்து விலகினார். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதில் இணைந்தார். வழக்கம்போல் இன்ஸ்டாகிராமில் தனது படங்களையும், அன்றாட செயல் முறைகள் பற்றியும் பகிர்ந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்க தளத்தில் தான் வெளியிட்ட எல்லா படங்களையும் அழித்துவிட்டு ஒரு வீடியோ மற்றும் 6 படங்கள் மட்டுமே வைத்திருக்கிறார். வீடியோவில் ரசிகர்களுக்கு எதையெல்லாம் செய்யக்கூடாது என்று கண்டிஷன்கள் சொல்லி இருக்கிறார்.

விஜய்யுடன் தான் நடித்த கில்லி பட கிளிப்பிங்ஸை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் திரிஷா. அதில், வில்லன் வண்டியிலேயே ஏறி அவன் இருப்பிடத்துக்கு வரக்கூடாது, உனக்குப் பின்னாலே யே வில்லன் ஆட்கள் இருக்கும்போது மயங்கி விழக்கூடாது மகளிடமே அவரது அப்பாவை அங்கிள் என்று அறிமுகப்படுத்தக்கூடாது, எப்போது பார்த்தாலும் சாப்பிடக் கார பூரி கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது, எனப் பதிவிட்டிருக்கிறார். இது விஜய் நடித்த சூப்பர் ஹிட் கில்லி பட வீடியோ என்பதால் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.....

View this post on Instagram

Dang🔥Loved this😂 #Ghilli

A post shared by Trish (@trishakrishnan) on

READ MORE ABOUT :