இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்த வழக்கு சிபிஐ விசாரணையில் இருக்கிறது. முன்னதாக அவர் மரணம் அடைந்த தகவல் வெளியானதும் வாரிசு நடிகர், நடிகைகள்தான் சுஷாந்த் தற்கொலைக்குக் காரணம் அவரை வாரிசு நட்சத்திரங்கள் அவமரியாதை செய்தனர். அதனால் அவர் மன உளைச்சல் அடைந்தார் என்று விவாதங்கள் நடந்து வருகிறது. நடிகை கங்கனா ரனாவத்தும் இந்த வாதத்தை முன்வைத்தார்.
இதையடுத்து ரசிகர்கள் வாரிசு நட்சத்திரங்களை திட்டி வருகின்றனர். அவர்களது வலைப் பக்கத்துக்கே சென்று கேள்வி எழுப்புகின்றனர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாரிசு நட்சத்திரங்கள் பலர் தங்களது இணைய தள பக்கத்திலிருந்து வெளியேறினார்கள்.
ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. வாரிசு நட்சத்திரங்கள் பற்றி நடிகை கங்கனா ரனாவத்தும் குறை சொல்லியிருந்தார். மறைமுகமாக அவரை சோனாக்ஷி கண்டித்தார். ஒருவர் மரணம் அடைந்திருக்கும்போது அதைவைத்து சிலர் பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்கள் என்றார். இதையடுத்து மேலும் பலர் சோனாக்ஷியை வசை மாறி பொழிந்தனர்.
இதுகுறித்து மும்பை சைபர் கிரைமில் சோனாக்ஷி புகார் அளித்தார். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஐதராபாத்தைச் சேர்ந்த சஷிகாந்த் ஜாதவ் என்ற 27வயது இளைஞரைக் கைது செய் தனர். இதையடுத்து சைபர் கிரைம் போலீ சாருக்கு சோனாக்ஷி நன்றி தெரிவித்திருக்கிறார்.
இணையதளத்தைப் பாதுகாப்பான தளமாக மாற்ற வேண்டும் என்பதே சைபர் கிரைம் போலீஸ் துறையின் நோக்கம். பெண்களை அவதூறாக பேசுவர்களை பிடித்து கைது செய்து பெண்களுக்கு பாது காப்பு தளமாக இதனை மாற்ற நடவடிக் கை எடுக்கிறோம். சோனாக்ஷி புகாரையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சைபர் கிரைம் ராஷ்மி கரண்டிகர் தெரிவித்திருக்கிறார்.