பிரபல நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 8 வருடங்களாகக் காதலித்து வருகின்றனர். காதல் தொடங்கிய நாளிலிருந்து இருவரும் டேட்டிங் செய்வதும் தொடங்கிவிட்டது. முதலில் விழாக்களுக்கு ஜோடியாக வந்தவர்கள் பின்னர் வெளிநாடுகளுக்குச் சென்று சுற்றினார்கள். சினிமா பாணியிலேயே தங்களது காதலை நடத்தினர். ஸ்டார் ஓட்டல், பீச் பார்க் சினிமா என்று ஜாலி யாக சுற்றினார்கள். கடைசியாக நியூயார்க் நகருக்குச் சென்று வாரக்கணக்கில் தங்கியிருந்து டேட்டிங் செய்தனர். சென்னை திரும்பிய பிறகு சம்மரில் மற்றொரு டூருக்கு திட்டமிட்டனர். எல்லாவற்றையும் கொரோனா ஊரடங்கு சின்னாபின்னமாக்கி விட்டது.
ஊர் ஊராக, நாடு விட்டு நாடு பறந்துக் கொண்டிருந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி ஒரே வீட்டில் மாதக் கணக்கில் முடங்கி இருக்கின்றனர். இதில் போரடித்துப் போனதால் விக்னேஷ் சிவன் நியூயார்க் நகரில் ஒட்டலில் நயன்தராவுடன் செலவிட்ட நேரங்களை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறார். தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் காபிஷாப் ஒன்றில் நயன்தாராவுடன் அமர்ந்து காபி அருந்தும் படத்தை வெளியிட்டதுடன் தனது ஏக்கத்தையும் பகிர்ந்திருக்கிறார்.
ஊர்சுற்றுவதை ரொம்பவே மிஸ் செய்கிறேன். கொரோனா போ, கொரோனாவே தூரமாக ஓடிப்போய்விடு, நியூயார்க் சிட்டியை மறக்கமுடியுமா? என பதிவிட்டு, அடுத்து ஊர் சுற்ற எப்போது தயார் ஆவது என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புலம்பித் தள்ளி இருக்கிறார் விக்னேஷ்சிவன். நயன்தாரா நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்க உள்ளார் விக்னேஷ்சிவன். அதன் படப்பிடிப்பு தொடங்கவும் கொரோனா லாக்டவுன் தடையாக இருப்பதால் சோர்ந்திருக்கிறது இந்த காதல் ஜோடி
கொரோனாவே ஓடிவிடு காதலியோட ஊர் சுற்ற முடியவில்லை.. பிரபல இயக்குனர் ஆதங்கம்..
Advertisement