24 மணி நேரத்துக்குள் 30 லட்சம் பேர் பார்த்த விஜய் சேதுபதியின் லாபம்..

Vijaysethupathi Labam Trailer 3 Million Views within 24 Hours,

by Chandru, Aug 23, 2020, 19:33 PM IST

ஹீரோவாக நடித்தாலும் அவ்வப்போது வில்லன் வேடங்களையும் ஏற்றுத் தனது ஹீரோ இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் நடிக்கிறார் விஜய் சேதுபதி . பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அடுத்து மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார். விரைவில் கமல்ஹாசன் நடிக்கும் தலைவன் இருக்கிறான் படத்தில் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்தாலும் தனது ஹீரோ இமேஜில் கெத்தாக நிற்கிறார். எஸ்பி,ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தில் ஹீரோவாக நடிக்கும் விஜய் சேதுபதி விவசாயிகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். அனல் பறக்கும் வசனங்களை மிக யதார்த்தமாகப் பேசி நடிக்கிறார்.புறம்போகு எனும் பொதுவுடைமை படத்தில் இணைந்த எஸ்பிஜனநாதன், விஜய் சேதுபதி 5 வருடங்களுக்குப் பிறகு லாபம் படத்தில் இணைந்திருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். லாபம் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. டிரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்துக்குள் 3 மில்லியன் அதாவது 30 லட்சம் பேர் பார்த்துள்ளதுடன் டிரெண்டிங்கில் நெம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

You'r reading 24 மணி நேரத்துக்குள் 30 லட்சம் பேர் பார்த்த விஜய் சேதுபதியின் லாபம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை