பெண்களுக்கு எதிராகக் குற்றம் நடந்தால் அதற்காக வாய்ஸ் கொடுத்து வந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் நடிகை வனிதா 3வது திருமணம் செய்தபோது அந்த திருமணத்துக்கு எதிராகக் குரல் கொடுத்ததுடன் வனிதாவை மணந்த பீட்டர் பால் தனது முதல் மனைவியின் சம்மதம் பெறாமல் இந்த திருமணம் செய்தது சட்டப்படி குற்றம் என்றார். அவரது பேச்சைக் கேட்டு கோபம் அடைந்த வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தார். இது பரபரப்பானது. போலீஸ் வரை புகார் சென்றது. பின்னர் லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் ஒன்றே கால் கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதற்குப் பதிலடியாக இரண்டரை கோடி நஷ்ட ஈடு கேட்டு வனிதா நோட்டீஸ் அனுப்பினார். இதில் லட்சுமி ராமகிருஷ்ணன் அவமானப்படுத்தப்பட்டார் என்றே பலரும் கூறினர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நடிகை சுமலதா எம்பி இடுப்பில் கைவைத்ததாக தகவல் படங்களுடன் வெளியானது. அதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது. பலர் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு டேக் செய்தனர். அதைக்கண்டு கோபம் அடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், இனிமேல் சமூக வலைதளத்தில் நான் எதற்கும் குரல் கொடுக்கப்போவதில்லை. எனக்கு என் குடும்பம்தான் முக்கியம் அவர்களுக்குத் தான் முன்னுரிமை தருவேன். எதற்கும் குரல் கொடுக்கச் சொல்லி எனக்கு டேக் செய்யாதீர்கள்.
இப்போது குரல் கொடுக்கச் சொல்பவர்கள் நான் தாக்கப்பட்டபோது எங்கு போனீர்கள். அப்போது வாய் மூடிக்கொண்டிருந்தீர்களே. நான் போராட்டங்களை சந்த்தித்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு ஆதரவாக எனது குடும்பமும் எனது நல விரும்பிகள் மட்டுமே இருக்கின்றனர். வேறு யாரும் இல்லை. இனி மேல் வாய்ஸ் தருவதை விட்டுவிட்டேன். யாரும் பிரச்சனைகளை எனக்கு டேக் செய்யாதீர்கள். நான் அரசியல் கட்சியில் இல்லை. ஜாதி விவகாரத்தை என்னிடம் கொண்டு வராதீர்கள்.
இவ்வாறு பொங்கி எழுந்துவிட்டார் லட்சுமி ராமகிருஷ்ணன்.