சந்தானம் படத்தில் இளையராஜா ஹிட் பாடல் ரீமேக்.. பாடல் உரிமை வாங்கியது யார் தெரியுமா?

Advertisement

பாடலை ரசிப்பதா, காட்சியமைப்பை ரசிப்பதா என ஒரு சில பாடல்கள் நம்மைத் திண்டாட வைக்கும். ஏனென்றால் இசைக்காக ஒரு முறை, பாடல் வரிகளுக்காக ஒரு முறை, காட்சியமைப்புகளுக்காக ஒரு முறை என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும். அந்த வரிசையில் மிக முக்கியமான பாடல் 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம்பெற்ற 'கைவச்சாலும் வைக்காம'போனாலும் என்ற பாடல். சங்கிதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'மைக்கேல் மதன காமராஜன்'. அந்தப் படத்தில் இடம்பெற்ற 'வைத்தாலும் வைக்காம' என்ற பாடல் மிகவும் பிரபலம். இசைஞானி இளையராஜாவின் துள்ளல் கொள்ளும் இசையால் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் ஆனது.

அந்தப் பாடலில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ், சந்தான பாரதி உள்ளிட்ட பலருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இப்போதும் அந்தப் பாடல் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது 'டிக்கிலோனா' படக்குழு. தற்கால இசையைச் சேர்த்து, இப்போதுள்ள இளைஞர்களும் கொண்டாடும் வகையில் இதனை மாற்றி அமைத்திருப்பதே இதன் விஷேசம்.இதற்கான உரிமையை இசைஞானி இளையராஜாவிடமிருந்து வாங்கி, 'டிக்கிலோனா' படத்துக்காக மார்டனைஸ் செய்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. ஆகையால், அதே மைக்கேல் மதன காமராஜன் போன்றதொரு காமெடி கலாட்டாவை 'டிக்கிலோனா' படத்திலும் இடம்பெறவுள்ளது என்பதை உறுதியாக நம்பலாம். இதில் ஒரு சிறு பகுதியை மட்டும் 'டிக்கிலோனா' ட்ரெய்லரில் காட்டியிருந்தது படக்குழு. படத்தில் அந்தப் பாடலில் உள்ள காமெடி கலாட்டா கண்டிப்பாக ரசிக்க வைக்கும். அதே போல் ட்ரெய்ரும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் 21-ம் தேதி மாலை வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லர் யூடியூப் தளத்தில் இப்போதும் ட்ரெண்ட்டாகி வருவது இதற்கு ஒரு சான்று. சந்தானம் படங்களின் ட்ரெய்லர்களில் குறைந்த மணி நேரத்தில் அதிகமான பார்வைகள் கொண்ட ட்ரெய்லராக 'டிக்கிலோனா' உருவாகியுள்ளது. இதுவரை 6 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. படக் குழுவினரோ ஹிட் கன்பார்ம் என்று உறுதியுடன் இருக்கிறார்கள்.

கார்த்திக் யோகியின் கலகலப்பான இயக்கம், சந்தானத்தின் பதிலடி வசனங்கள், யுவனின் மயக்கும் இசை, யோகிபாபுவின் அசத்தல் காமெடி, ஆனந்தராஜ் - முனீஸ்காந்த் - 'நான் கடவுள்' ராஜேந்திரன், 'யூடியூப்' புகழ் பிரசாந்த் உள்ளிட்ட பலருடைய கலாட்டாக்கள் என அனைத்தும் ஒரே படத்தில் இணைந்துள்ளதே இந்த வெற்றிக்குச் சான்று என்கிறது படக் குழு. இப்படத்தின் கதைக்களத்தை நம்பி முதலீடு செய்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி சினீஷ் எனப் படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே டபுள் ஹாப்பி.

கார்த்திக் யோகி இயக்கியுள்ள 'டிக்கிலோனா' படத்தில் சந்தானம், யோகி பாபு, ஆனந்தராஜ், அனிகா, ஷெரின், முனீஸ் காந்த், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஆர்வி, எடிட்டராக ஜோமின், கலை இயக்குநராக ராஜேஷ், சண்டைக் காட்சிகள் இயக்குநராக தினேஷ் சுப்பராயன், பாடலாசிரியர்களாக அருண்ராஜா காமராஜ் மற்றும் சரவெடி சரண், நடன இயக்குநராக ஷெரீஃப், ஆடை வடிவமைப்பாளராக கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.பார்வையாளர்களை எப்படியெல்லாம் கவலைகளை மறந்து சிரிக்க வைப்பது என்பதற்காகவே இரவு- பகல் பாராமல் உழைத்து வருகிறது 'டிக்கிலோனா' படக் குழு. நமக்கெல்லாம் ஒரு தழைவாழை காமெடி விருந்து விரைவில் காத்திருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>