வில்லன் நடிகருக்கு மேக்கப் போட்ட மோகன்லால்

Mohanlal putting makeup for baburaj

by Nishanth, Aug 24, 2020, 17:30 PM IST

கொரோனாவால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் கடந்த மாதமே கேரளாவில் படப்பிடிப்பைத் தொடங்குவதற்குக் கேரள அரசு அனுமதி அளித்துவிட்டது.

இதையடுத்து பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பிரியதர்சனின் இயக்கத்தில் 'குஞ்சாலி மரைக்கார்' என்ற படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார். இந்த படம் கடந்த மார்ச் 26ம் தேதி திரைக்கு வர இருந்தது.ஆனால் கொரோனா காரணமாகப் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் குறித்த நேரத்தில் இந்த படத்தைத் திரைக்குக் கொண்டுவர முடியவில்லை.

இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பிரபல நடிகர் பாபுராஜ் வில்லனாக நடித்து வருகிறார். அவருக்கு மோகன்லால் மேக்கப் போடும் ஒரு போட்டோ தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவை நடிகர் பாபுராஜ் தனது பேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தார். அதில் அவர் 'பைனல் டச் ஃப்ரம் லாலேட்டன்'எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த படத்திற்குப் பின்னர் மோகன்லால் ஜீத்து ஜோசப் இயக்கும் திருஷ்யம் 2 படத்தில் இணைகிறார்.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை