கொரோனா பாதிப்பு பற்றிக் கவலைப்படுபவர்கள் நிறையப் பேர் உள்ள நிலையில் நிஜமாகவே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். அவர் மட்டுமல்ல மகன் அபிசேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யாராய். பேத்தி ஆராத்யா என குடும்பமே தொற்றுக்குள்ளாகி மும்பையில் ஒரே மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர்.மற்றவர்கள் எப்படியும் குணம் அடைந்து விடுவார்கள் என்று எண்ணியவர்கள் 75 வயதான அமிதாப்பை எண்ணி பலர் கவலைப்பட்டனர். அவர் நலமடைந்து திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். அதேசமயம் மருத்துவமனையிலிருந்து அமிதாப் கொரோனா பற்றிக் கவலைப்படாமல், அதனால் ,தான் அனுபவிக்கும் பிரச்சனைகள் பற்றி பக்கம் பக்கமாக இணைய தள பக்கத்தில் எழுதி வந்தார், கொரோனாவுடன் வீரன் போல் போராடி மீண்டு வந்தார்.
இந்த நிலையில் சினிமா படப்பிடிப்பு தொடங்க மகாராஷ்டிரா அரசு அனுமதி வழங்கியது ஆனால் 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இது அமிதாப்பிற்கு அதிர்ச்சி தந்தது,இதற்கிடையில் கோர்ட்டில் சினிமா சங்கம் வழக்கு தொடர்ந்து 65 வயதுக்கு மேல் உள்ளவர் படப்பிடிப்பில் பங்கேற்க கூடாது என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இது அமிதாப்பிற்கு ஆறுதல் அளித்தது.
இதுபற்றி அவர் கூறும்போது, 50 வயதுக்குள் உள்ளவர்கள்தான் வேலைக்குச் செல்லவேண்டும் என அரசு சொன்னது. இதனால் 78 வயதான நான் என்ன செய்வது என்று அதிர்ச்சி அடைந்தேன் என்றார். தற்போது மத்திய அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளது. வீட்டில் கொரோனா பயத்தில் முடங்காமல் கோன் பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் அமிதாப். கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் 3 சீசன்களை ஷாருக்கான் தொகுத்து வழங்கினார். அதன்பிறகு 10 சீசன்களையும் அமிதாப் பச்சனே தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியை மீண்டும் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கவுள்ளார். அதற்கான சூட்டிங்கில் அனைவரும் பி இ இ கவச உடைகளை அணிந்தபடி பங்கேற்றனர்.
இதுகுறித்து அமிதாப் சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். 75 வயதிலும் கொரோனா தொற்று பற்றிக் கவலைப்படாமல் அதற்கு பெப்பே காட்டி அமிதாப் ஷூட்டிங்கில் கலந்து கொண்டது பலருக்கு கொரோனா அச்சத்தை விரட்டி இருக்கிறது.