எஸ் பி பி விரைவில் உடல் நலம் பெற நடிகர் மம்மூட்டி வாழ்த்து

by Nishanth, Aug 24, 2020, 19:38 PM IST

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ் பி பி உடல் நலம் பெற வேண்டி உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களும், நடிகர்கள் உட்படப் பல முக்கிய பிரமுகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சபரிமலை உட்படப் பல முக்கிய கோவில்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும் எஸ் பி பிக்காகச் சிறப்புப் பூஜைகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, எஸ் பி பி உடல் நலம் பெற வேண்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டரில் கூறியிருப்பது: பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். எனது சினிமா வாழ்வில் 2 படங்களில் எனக்காக அவர் பாடியுள்ளதை என்னால் மறக்க முடியாது. எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அவர் விரைவில் உடல்நலம் தேறுவார் என நம்புகிறேன். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் பழையது போலப் பாடத் தொடங்க வேண்டும். இவ்வாறு நடிகர் மம்மூட்டி தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Get your business listed on our directory >>


READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை