பிரபல நடிகையை பாலியல் பிரச்சனையில் சிக்க வைக்க முயன்ற காஸ்டிங் கவுச்.. ஹீரோயினே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

Advertisement

பாகுபலி நடிகை அனுஷ்கா தனக்கென ஒரு இடத்தை திரையுலகில் தக்க வைத்திருக்கிறார். ரஜினியுன் லிங்கா, சூர்யாவுடன் சிங்கம், விஜய்யுடன் வேட்டைக்காரன், சிம்புவுடன் வானம், கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன், பிரபாஸ் உடன் பாகுபலி என சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். மேலும் அருந்ததி, ருத்ரமாதேவி எனப் பல படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்திருக்கிறார். அடுத்து அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள நிசப்தம் படத்தில் நடித்திருக்கிறார்.பிரபல நடிகையாகத் திகழும் அனுஷ்காவுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை தரும் செயலுக்கு உள்ளாக்க காஸ்டிங் கவுச்கள் முயன்றனர். இது குறித்து இதுவரை மவுனம் காத்து வந்த அனுஷ்கா தற்போது வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.

நிசப்தம் படம் திரைக்கு வரவுள்ளது. அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் அனுஷ்கா கூறும்போது, சினிமாவுக்கு நான் வந்த ஆரம்பக்கால கட்டங்களில் காஸ்டிங் கவுச் தொல்லை எனக்கும் இருந்தது. பலரும் இதுபோன்ற சூழலைத் திரையுலகில் அனுபவித்துள்ளனர். ஆனால் நான் பாதிக்கப்படவில்லை. நான் ஸ்டிரைட் பார்வேர்டாகவும் துணிச்சலாகவும் இருந்ததால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்றார்.
முன்னதாக பாகுபலி படத்துக்குப் பிறகு உடல் எடை யை குறைப்பதற்காக சுமார் 2 வருடங்கள் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார் அனுஷ்கா.

வெளி நாடுகள் சென்றும் உடல் எடை குறைக்கச் சிகிச்சை மேற்கொண்டார். இவை எல்லாமே அவருக்குச் சிறிதளவே கைகொடுத்தது. இதற்கிடையில் பல படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை அவர் ஏற்க மறுத்தார். தனது உடல் எடை குறைந்திருக்கிறது என்று நம்பிக்கை வந்த பிறகு நிசப்தம் என்ற த்ரில்லர் படத்தில் அனுஷ்கா நடித்திருக்கிறார். இப்படம் கடந்த ஆண்டே வெளியாகவிருந்த நிலையில் தாமதம் ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கால் மேலும் பட ரிலீஸ் தள்ளிப்போனது. தற்போது படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன,

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>