நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்தார். பீட்டர் பாலுக்கும் இது 2வது திருமணம். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர். முதல் மனைவியிடம் அனுமதி பெறாமல் அல்லது சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வனிதாவைத் திருமணம் செய்ததாக பிரச்சனை எழுந்தது.
இதுகுறித்து நடிகைகள் லட்சுமி ராம கிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் வனிதாவையும் பீட்டர் பாலையும் தட்டிக் கேட்டனர். இதையடுத்து வனிதாவுக்கும் இவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸ், கோர்ட் வரை விவகாரம் சென்றது.
இந்நிலையில் வனிதாவின் கணவர் பீட்டர் பாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி விசாரிக்க வனிதாவிடம் செல்போனில் பேச முயன்றபோது அவர் பதில் அளிக்கவில்லை.