நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். அடிக்கடி வெளிநாடு சென்று டேட்டிங் செய்கின்றனர். நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் அடுத்து அவர் நடிக்கும் காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக சமந்தா நடிக்க உள்ளார்.விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் பற்றி அவ்வப்போது தகவல்கள் பரபரப்பாக வெளியாகி, பிறகு புஸ்வானமாகி விடுகிறது. ஏற்கனவே இருவருக்கும் ரகசிய திருமணம் ஆகிவிட்டது என்ற ஒரு தகவலும் உள்ளது. எப்போது தான் உங்களுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் என்று விக்னேஷ் சிவனிடம் கேட்டபோது அதற்குப் பதில் அளித்திருக்கிறார்.
அவர் கூறியதாவது: எங்களுக்கு இதுவரை 22 முறையாவது இணைய தளத்தில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். மூன்று மாதத்துக்கு ஒரு முறை எங்களுக்குத் திருமணம் பண்ணி வைக்கிறார்கள். எங்கள் இருவருக்கும் சில நோக்கங்கள் இருக்கிறது. சில திட்டங்கள் இருக்கிறது. அதையெல்லாம் முடித்த பிறகுதான் எங்களின் பர்சனல் லைப்புக்கு வர முடிவு செஞ்சிருக்கிறோம். இப்போதைக்கு எங்கள் கவனம் முழுவதும் வேலையில்தான் இருக்கிறது. எங்களுக்கு லவ் எப்போது போர் அடிக்கிறது என்று பார்ப்போம், அப்போது கல்யாணம் பண்ணிக்குவோம். அந்த நேரம் வரும்போது எல்லோருக்கும் கண்டிப்பாகத் தெரிவிப்போம்.
இவ்வாறு விக்னேஷ் சிவன் கூறி உள்ளார்.நயன்தாரா நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தில் இவர்களுக்கு கல்யாணம் நடக்குமா என்று காத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.