பிரபல இயக்குனர்- அரசியல்வாதிக்கு கொரோனா தொற்று..

director Gouthaman and His Family Tested Postive COVID 19

by Chandru, Aug 25, 2020, 18:26 PM IST

கனவே கலையாதே, மகிழ்ச்சி ஆகிய படங்களை இயக்கியதுடன் டிவி சீரியலாக சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மற்றும் ஆட்டோ சங்கர் ஆகிய சீரியலை இயக்கியவர் கவுதமன். தமிழர் குடியரசு கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டுள்ளார்.இயக்குநர் கவுதமன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

கவுதமன் குணம் அடைய வேண்டி இயக்குனர் சீமான் டிவிட்டர் வெளியிட்டுள்ள பதிவில், ”தம்பி வ.கௌதமன் அவர்களும் அவரின் குடும்பத்தாரும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு நலம் பெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியும், தீவிர சிகிச்சை அளித்தும் நோய்த் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டும் அதிகரித்து வருகின்றன. பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ராஜ மவுலி, நடிகர் விஷால், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், கருணாஸ் எம் எல் ஏ உள்ளிட்ட பலர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பிரபல இயக்குனர்- அரசியல்வாதிக்கு கொரோனா தொற்று.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை