சந்திரமுகி படத்தில் ரஜினி ஒரு வசனம் சொல்வார். அரண்மனை வீட்டில் அவர் தங்குவதற்குப் பெரிய அறை தருவார்கள். அறைக்குள் அமர்ந்துக் கொண்டு அந்த அறையைக் கண்டு பயந்து கொடுக்கும் போது பந்தாவாக வாங்கிட்டோம் இப்ப பயமாக இருக்கு என்பார். இந்த நிலையில் தான் பலர் தவிக்கிறார்கள். பந்தாவாக இருக்கும் என்று விலை உயர்ந்த கார், நீண்ட சொகுசு கார், பெரிய பங்களா என எல்லாவற்றையும் பெரிதாக வாங்கிவிட்டு பின்னர் அதைப் பராமரிக்க முடியாமல் கிடப்பில் போடுகிறார்கள். இப்படித்தான் ஹாலிவுட் நடிகர் ஒருவரது நிலைமை ஆகி இருக்கிறது.
உலக அளவில் ரசிகர்களைக் கொண்டிருப்பவர் சில்வர் ஸ்டெர் ஸ்டாலோன். இவர் ஒரு தனியார் விமானத்தில் இருக்கும் வசதிகளுடன் கூடிய கார் ஒன்றை 4 லட்சம் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கினார். கருப்பு நிற நீண்ட சொகுசு காரான இதில் வரும்போது அமெரிக்க பிரசிடெனட் காரோ எனச் சந்தேகப்படும் படியாக பந்தாவாக இருக்கும். மொபைல் இன்டர்நெட், சொகுசு சாய்வு இருக்கைகள், அல்ட்ரா ஹெச்.டி டிவி 43 இன்ச் என ஒரு ஹோம் தியேட்டர் செட்டப் போன்று பல வசதிகள் இதில் உள்ளன. ஆட்டோமேட்டிவ் டிசைன் என்ற நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. இந்த காரை பயன்படுத்தி வந்த நடிகருக்கு தற்போது அது போரடித்து விட்டது. அந்த காரை விற்பனைக்கு அறிவித்திருக்கிறார். 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு விற்க முடிவு செய்துள்ளார். காரை டிசைன் செய்த நிறுவனமே காரை விற்பனை பொறுப்பை ஏற்றுள்ளது. அமெரிக்காவில் விவிஐபிக்கள் ஒரு சிலரிடம் மட்டுமே இதுபோன்ற கார் உள்ளது.