நடிகை தமன்னா பெற்றோருக்கு கொரோனா உறுதி.. தமன்னாவுக்கு என்னாச்சு..

நடிகை தமன்னா கொரோனா ஊரடங்கில் மும்பையில் குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார். அவர் இன்று ஒரு ஷாக் தகவல் வெளியிட்டார். அதில் தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி டிவிட்டரில் அவர் வெளியிட்ட மெசேஜில் கூறியிருப்பதாவது:எனது பெற்றோருக்கு கொரோனா அறிகுறி தெரிந்தது. உடனடியாக குடும்பத்தில் எல்லோரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டோம். அதற்கான ரிசல்ட் வந்தது. எதிர்பாராதவிதமாக எனது பெற்றோருக்கு கொரோனா தொற்று பாசிடிவ் எனத் தெரிய வந்தது. உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.குடும்பத்தில் நான் உள்பட யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரிய வந்தது. கடவுள் அருளாலும் உங்கள் பிரார்த்தனை, ஆசியாலும் எனது பெற்றோர் குணம் அடைவார்கள்.

இவ்வாறு தமன்னா கூறி உள்ளார்.

தமன்னா கடைசியாகத் தமிழில் ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார். அடுத்து தமிழில் படங்கள் எதுவும் இல்லை. தெலுங்கில் இவர் நடித்துள்ள தட் ஈஸ் மகாலட்சுமி படம் திரைக்கு வராமல் உள்ளது. மேலும் 3 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.பாலிவுட்டில் ஏற்கனவே அமிதாப்பச்சன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா மற்றும் நடிகர் விஷால், கருணாஸ், ஐஸ்வர்யா அர்ஜுன் போன்றவர்கள் கொரோனா தொற்றால் பாதித்து சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :