நிச்சயதார்த்த விருந்தில் மணமகனை அசத்தல் நடனமாடி வரவேற்ற மியா ஜார்ஜ்

Advertisement

மலையாள சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் மியா ஜார்ஜ். 2010ல் 'ஒரு ஸ்மால் பேமிலி' என்ற படத்தில் அறிமுகமான இவர், 'ரெட் வைன்', 'மெமரீஸ்', 'அனார்கலி' உள்பட 30க்கும் மேற்பட்ட படங்களில் மலையாளத்தில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். தமிழில் இவர் 'அமரகாவியம்' என்ற படத்தில் அறிமுகமானார்.இதன் பின்னர் 'இன்று நேற்று நாளை', 'வெற்றிவேல்' 'ஒரு நாள் கூத்து' உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கும் கோட்டயத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவருக்கும் திருமணம் நடத்த இருவரது பெற்றோரும் தீர்மானித்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில தினங்களுக்கு முன் கோட்டயத்தில் நடந்தது. நிச்சயதார்த்தத்திற்குப் பின் கோட்டயம் அருகே உள்ள பாலா செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடந்தது. இதன் பின்னர் அங்கு உள்ள ஒரு ஓட்டலில் நிச்சயதார்த்த வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. மணமகன் அஸ்வின் மேடைக்கு வருவதற்கு முன்பாகவே நடிகை மியா ஜார்ஜ் மேடைக்கு வந்துவிட்டார்.

அஸ்வின் மேடைக்கு அருகே வந்தபோது திடீரென 'அன்வர்' என்ற இந்திப் படத்திலிருந்து ஒரு பாடல் ஒலிபரப்பானது. இந்த பாடலுக்கு மியா ஜார்ஜ் யாருமே எதிர்பாராத வகையில் திடீரென அசத்தலாக ஒரு நடனம் ஆடினார். நடனம் ஆடியபடியே தனது வருங்கால கணவர் அஸ்வினை அவர் கைபிடித்து மேடையேற்றினார். இதைப் பார்த்த அரங்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மியா ஜார்ஜின் இந்த திடீர் அசத்தல் நடனம் அஸ்வினையும் வெகுவாக கவர்ந்தது. இவர்களது திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>