இனிமேல் ஒருத்தர் பிறந்து வந்தாலும் இவரை மாதிரி யாரும் சாதிக்க முடியாது.. நடிகர் அர்ஜூன் உறுதி..

by Chandru, Aug 26, 2020, 19:27 PM IST

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு வென்ட்டிலேட்டர் உதவியுடன் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் திரையுலகினர் ரசிகர்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்காகக் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். தற்போது அவர் ஆபத்தான கட்டங்களைக் கடந்து உடல் நிலை 90 சதவீதம் குணம் அடைந்திருப்பதாக மகன் சரண் தெரிவித்தார்.

நடிகர் அர்ஜூன் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை சீரடைய வேண்டும் என்று வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இனிமேல் ஒருத்தர் பிறந்து வந்தாலும் இவரை மாதிரி யாரும் சாதிக்க முடியாது. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, தெலுங்கில் மட்டுமல்ல மலையாளத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சாதித்தவர். அவர் வேறுயாருமல்ல வாழும் சாதனையாளர் பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் சார். கொஞ்ச நாட்களாக உடல் நிலை சரியில்லாததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடவுள் அருளால் அவரது உடல்நிலை சீரடைந்திருக்கிறது.

பிரார்த்தனையை விட வேறு மருந்து எதுவும் இல்லை என்று சொல்வார்கள் எஸ்பிபிக்காக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தார்கள் கூடிய சீக்கிரத்தில் எஸ்பிபி சார் ரொம்ப ஆரோக்கியமாக வீடு திரும்பி வருவார். எஸ்பிபி சார் உங்களுக்காக காத்திருக்கிறோம். நீங்கள் போராட்ட குணம் கொண்டவர் என்பது எங்களுக்குத் தெரியும் சீக்கிரத்தில் உங்க பாட்டை கேட்க ஆவலாக இருக்கிறேன். சீக்கிரம் வாங்க. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.
இவ்வாறு அர்ஜூன் தெரிவித்திருக்கிறார்.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Cinema News

அதிகம் படித்தவை