திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவி சிகிச்சையுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க டாக்டர்களுடன் மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனை பெற்று சிகிச்சை அளிக்கின்றனர். எஸ்பிபிக்கு கொரோனா தொற்று நெகடிவ் என்று நேற்று முன்தினம் காலை தகவல் பரவியது. முதலில் அதை உறுதி செய்த மகன் எஸ்பிபி சரண் பின்னர் வெளியிட்ட வீடியோவில் மறுத்தார், எனது தந்தைக்கு கொரோனா தொற்று நெகடிவ் ஆகியிருக்கிறது. அந்த தகவலை என்னை இணைய தளத்தில் பதிவு செய்யும்படி சிலர் வற்புறுத்தினார்கள். எனது தந்தை உடல்நிலை பற்றி தினமும் நான் டாக்டர்களுடன் ஆலோசித்து வருகிறேன்.
கொரோனா நெகடிவா பாசிடிவா என்பதில்லை, இன்னமும் அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சை தரப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது. அவர் குணம் அடைவதற்கான சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது, என் தந்தை உடல்நிலை குறித்த தகவல் மருத்துவமனையிலிருந்து முதலில் எனக்குத் தான் தெரிய வரும். எனவே அவரது உடல்நிலை பற்றி வதந்திகள் எதுவும் பரப்ப வேண்டாம் என்றார்.நேற்று மாலை சரண் வெளியிட்ட மற்றொரு வீடியோவில் தந்தையைச் சந்தித்துப் பேசியதாகக் கூறினார். அவர் கூறும் போது,எனது தந்தைக்கு கொரோனா நெகடிவ் என்று தகவல் வெளியானது ஏற்கனவே நான் சொன்னபடி கொரோனா நெகடிவா, பாசிடிவா என்பதல்ல அவருக்கு டாக்டர்கள் வென்டிலேட்டர் கருவி உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனது தந்தையைச் சந்தித்தேன். என்னை அவர் அடையாளம் கண்டு கொண்டார். சைகை மொழியில் என்னுடன் பேசினார். உடல் நலம்பற்றி விசாரித்தேன் தம்ஸ் அப் காட்டி நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார். என்னைப் பற்றியும், என் அம்மா பற்றியும் விசாரித்தார். அவரிடம் எல்லோரும் அவருக்காகச் செய்யும் பிரார்த்தனை பற்றித் தெரிவித்தேன். கோவில் பிரசாதங்கள், சாமி படங்கள் எல்லாம் அவர் படுத்திருக்கும் பெட்டிக்கு அருகே வைக்கப்பட்டிருக்கிறது. அவரது அறையில் அவர் பாடிய பாடல்கள் ஒலிபரப்புவதற்கு அவர் ரெஸ்பான்ஸ் செய்தார். திறமை வாய்ந்த டக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். விரைவில் அவர் திரும்பி வருவார் என்றார்.
இந்நிலையில் நேற்று இன்னும் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டார். எஸ்பி பாடல் கேட்டு தாளம் போட்டர், பேப்பரில் எழுத முயன்றார் என்றார்.இதுகுறித்து நேற்று மாலை வெளியிட்ட வீடியோவில் சரண் கூறியது:நேற்று மருத்துவமனை சென்று என் தந்தைக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினேன். அவர்கள் கூறும்போது என் தந்தையின் நுரையீரலில் முன்னேற்றம் தெரிகிறது. இது அவர் குணம் அடைவதற்கான முதல் படி இன்னும் நீண்ட சிகிச்சை இருக்கும் அது சீராக அவரது உடலைக் குணம் அடையச் செய்யும். அவர் அறையில் பாடல்கள் ஒலிக்க வைக்கப்பட்டிருக்கிறது அதைக் கேட்டபடி விரல்களால் தாளம் போடுகிறார். எதையோ எழுதிக் காட்ட முயன்றார். ஆனால் பேனாவை அவரால் பிடிக்க முடியவில்லை. அடுத்த வாரம் எழுதிக் காட்டும் அளவுக்குத் தேறுவார். அவருக்குப் பத்திரிகை படித்துக்காட்டப்படுகிறது. டாக்டர்கள் கேட்பதற்குப் பதில் அளிக்கிறார். முன் தினம் பார்த்ததைவிட நேற்று நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு சரண் கூறினார்.
முன்னதாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் எஸ்பிபிக்கு வென்ட்டிலேட்டர், எக்மோ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து முன்னேற்றம் தெரிகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.