கன்னட பட உலகில் நாயகனாக வலம் வரும் சாகர் தமிழ்த் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் " கேக்காது". சாகர் ஜோடியாக சாயா தேவி நடிக்கிறார். இவர் நடிகரும் இயக்குனருமான யார் கண்ணனின் மகள் சாயாதேவி.
சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் பங்கேற்கிறார். மேலும் இதில், பிரதாப் போத்தன், மனோபாலா, ஏ.எல். அழகப்பன், மூணார் ரமேஷ், வளவன் . ராமச்சந்திரன், வையாபுரி, மயில்சாமி, சிசர் மனோகர், வர்கீஸ் மாத்யூ, நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கின்றனர்.
பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார்.
தாமரை, அமுதன் இருவரும் பாடல்களை எழுதுகின்றனர். பவர் பாண்டி சண்டைப் பயிற்சி அளிக்கிறார். தினா நடனப் பயிற்சி அளிக்கிறார், கே.வி,செந்தில் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். தீபன் கலை அமைக்கிறார். லெட் கிளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடட் சார்பில் டேனியல் தயாரிக்கிறார். " கேக்காது" படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் ரோஜர் டேனி. சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்துள்ளது.உலகமெங்கும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அபரிதமாக உள்ளது.
வெளிப்பயன்பாட்டுக்கு மட்டுமே இருந்து வரும் விஞ்ஞானம் வரும் காலத்தில் சிப் வடிவில் மனித உடலுக்குள் புகுந்து ஆட்டுவிக்கப் போகிறது. இதற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த உண்மையை கதாநாயகன் கண்டுபிடிக்கிறான். அதனால் மனித உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் அறிந்து நாயகன் அதிர்கிறான். அதன் பிறகு நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்கள் படத்தின் உச்சக்கட்டம். இதில் விஞ்ஞானம், அரசியல், என பரபரப்பாக இருக்கும் " என்கிறார் இயக்குனர் ரோஜர் டேனி.