இந்த ஊரடங்கு கோவிட் -19 சமயத்தில் பொழுதுபோக்கு துறை பேரிடரை எதிர் கொள்கிறது . நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால் , பல பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது . இவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதே அமைப்பின் நோக்கம் . இதற்காக யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) “ஒரு குரலாய்” எனும் 6 மணி நேர இன்னிசை நிகழ்ச்சி உலகளவில் செப்டம்பர் 12-ஆம் தேதி 2020 அன்று முகநூலில் (ஃபேஸ்புக்) நடைபெற உள்ளது .
இதுபற்றி யுஎஸ்சிடி வெளியிட்டுள்ள அறிக்கை:யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) “ஒரு குரலாய்” எனும் 6 மணி நேர இன்னிசை நிகழ்ச்சி உலகளவில் செப்டம்பர் 12-ஆம் தேதி 2020 அன்று முகநூலில் (ஃபேஸ்புக்) நடைபெற உள்ளது . சிறந்த பாடல்கள் மற்றும் தங்களுக்கு விருப்பமான இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் பிரபலங்களுடன் உரையாடல்களில் பார்வையாளர்கள் பங்குபெறலாம். நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் யூஎஸ்சிடி இசை நிகழ்ச்சியின் போஸ்டர் வெளியிட்டு ஆதரவைத் தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றி. யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னணி பாடகர் ஶ்ரீநிவாஸால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இதில் இவருடன் இணைந்து பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், சுஜாதா மோகன், ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த் , ஹரிசரண் , சைந்தவி பிரகாஷ் ஆகியோர் அறங்காவலர்களாக பொறுப்பேற்கிறார்கள்.
எங்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் , முயற்சிகளுக்கும் நீடித்த ஆதரவளித்து உறுதுணையாக நிற்கும் ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர் நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய இந்த புதிய முயற்சிக்கு நீங்கள் தந்த பேராதரவை என்றென்றும் நாங்கள் மறக்க மாட்டோம்.இந்த இசை நிகழ்ச்சிக்கு ஃபேஸ்புக் இந்தியா தங்கள் முழு ஆதரவை தருகிறது மற்றும் இவர்களுடன் சில்வர்ட்ரீ நிறுவனம் இணைந்து உருவாக்கப்பட்டது இந்த இசை நிகழ்ச்சி. இதற்கு டிஜிட்டல் ஆதரவு அளிப்பது ஊடகா எனும் நிறுவனம் . நிதி திரட்ட உதவும் வலைதளம் insider.in இந்த ஒரு குரலாய்
நிகழ்ச்சியில் பங்குபெறும் அனைத்து கலைஞர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.