கொரோனா தொற்று ஊரடங்கில் தியேட்டர்கள் 5 மாதமாக மூடிக்கிடக்கிறது. மாஸ்டர், ஜெகமே தந்திரம், சூரரைப் போற்று போன்ற பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் முடங்கி வைக்கிறது. இனிமேல் தியேட்டர் திறப்பு எப்போது என்று தெரியாது என அரசு தரப்பும் குழப்பமான பதில் அளிப்பதால் படத் தயாரிப்பாளர்களும், தியேட்டர் அதிபர்களும் கோடி, கோடியாக கொட்டி முதலீடு செய்திருப்பதால் பயத்தில் உள்ளனர். சூரரைப்போற்று படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வது என்ற முடிவுடன் இருந்த சூர்யா தியேட்டர் திறப்பு எப்போது என்று தெரியாத சூழலில் தனது முடிவை மாற்றிக் கொண்டார். தனது படத்தை ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்கிறார் .
விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருக்கிறது. இது இறுதியான முடிவாக இருக்கும் என்று ரசிகர்களும் தியேட்டர் அதிபர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். தியேட்டரில் ரிலீஸ் செய்யும் முடிவுடன் தற்போது என் பெயர் ஆனந்தன் என்ற படக் குழுவும் தனது முடிவை உறுதியாக அறிவித்திருக்கிறது.
தணிக்கையில் இப்படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் படத்தைப் பாராட்டி இருக்கிறார்கள். இதில் சந்தோஷ் பிரதாப், அதுல்யா ரவி ஜோடியாக நடித்திருக்கின்றனர். ஜேஸ் பிரங்க்ளின் இசை அமைத்திருக்கிறார். மோனோ ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கி உள்ளார்.