படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் ஒரு சிறப்புத் திட்டம்...!

Governments special plan to turn educated youth into entrepreneurs ...!

by Loganathan, Aug 30, 2020, 16:09 PM IST

NEEDS ( New Entrepreneur cum Enterprises Development Scheme ) படித்த இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றுவதற்காகவும் , வணிகம் சார்ந்து இளைஞர்களை ஒன்றிணைப்பதற்காகவும் அரசு தனது 12வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் NEEDS திட்டத்தை அறிமுகம் செய்தது .2012-2013 ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது .

திட்ட நோக்கம்

1.படித்த முதல் தலைமுறை இளைஞர்களை , தொழில்முனைவோராக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

2. தொழில்முனைவோருக்கான பயிற்சிகளை வழங்குவது , அவர்களுக்குப் பயிற்சி முடிந்த பின் வங்கிக் கடன் தயார் செய்து கொடுப்பது போன்றவற்றையும் உருவாக்கப் பயன்படுகிறது.

செயல்படுத்தும் அமைப்புகள்

1. பயனாளர்களைத் தேர்ந்தெடுப்பது > மாநில அளவில் செயல்படுத்த Commissioner of industries and commerce , Chennai > மாவட்ட அளவில் செயல்படுத்த General manager of district industries .

2. தொழில்முனைவோருக்கான பயிற்சியை வழங்குதல் > மாநில மற்றும் மாவட்ட அளவில் Entrepreneurship Development Institute, Chennai

3.வங்கிக் கடன் ஏற்பாடு செய்தல் > மாநில அளவில் செயல்படுத்த Tamilnadu Industrial Investment corporation, Chennai (TIIC) > மாவட்ட அளவில் செயல்படுத்த General manager of District industries .

பயிற்சி மையம்

NEEDS திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக Entrepreneurship Development Institute Guindy , Chennai ல உள்ள அமைப்பு செயல்படுகிறது.

பயிற்சி முறைகள்

இந்த மையத்தின் மூலம் நடத்தை கூறுகள் , வணிக வாய்ப்புக்கான வழிமுறைகள், சிறு , குறு தொழில் நிலையங்களில் பின்பற்றப்படும் சட்ட திட்டங்கள் , மேலாண்மை சவால்களை எதிர்கொள்ளுதல் , வெற்றி பெற்ற தொழில்முனைவோர்களுடனான கலந்துரையாடல் போன்றவற்றை இந்த அமைப்பு ஏற்படுத்தித் தருகிறது.

பயிற்சிக்கான கால அளவு

EDP பயிற்சியானது ஒரு மாதம் அளிக்கப்படுகிறது. அதில் முதல் இரண்டு வாரம் theoretical பயிற்சியும் , 1 வாரம் சந்தை கணக்கெடுப்பு பற்றியும் , 1 வாரம் திட்ட அறிக்கையைத் தயார் செய்வதற்கான வழி முறைகளும் பயிற்சியாக அளிக்கப்படுகின்றன.

பாடத் திட்டங்கள்
1.நடத்தை கூறுகள் ( Behavior Components)
2. business opportunity guidance ( வணிக வாய்ப்புக்கான வழிமுறைகள்.
3. Business plan preparation ( வணிக திட்டம் தயார் செய்தல் )
4. Management issue ( மேலாண்மை சவால்கள்).
5. Law regulating the small business ( சிறு வணிகங்களுக்கான சட்ட திட்டங்கள்.
6. Environment Scanning

போன்றவைகள் நடத்தப்படும்.

தகுதிகள்

1.பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு குறைந்தபட்சம் 21 வயது முதல் 35

2. மற்ற பிரிவினருக்கு ( BC , MBC , SC ,ST ,Women , BCM, Transgender , ) வயது வரம்பு குறைந்தபட்சம் 21 முதல் 45.

கல்வித் தகுதிகள்

பட்டப்படிப்பு , பட்டய படிப்பு , ITI

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு

பயனாளிகளுக்கான இட ஒதுக்கீடு

SC -18 %
ST -1%
மாற்றுத்திறனாளிகள் - 3%
பெண்கள் -50% ( விதவைகள் , ஆதரவற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.)

இந்த திட்டத்தில் பயனடைய எந்த விதமான வருமான எல்லையும் இல்லை .

திட்ட மதிப்பீடு

1. திட்டத்தின் மதிப்பீடு குறைந்தபட்சம் 5 இலட்சத்தில் மேலாகவும் , அதிகபட்சமாக 1 கோடி வரையும் இருக்கலாம்.

2. இடத்திற்கான மதிப்பையும் இந்த திட்டத் தொகையில் சேர்த்துக்கொள்ளலாம்.

பயனாளிகளின் பங்களிப்பு

1. பொதுப்பிரிவினர் தங்களின் திட்ட மதிப்பீட்டில் 10% தனது பங்களிப்பாகக் கொடுக்க வேண்டும்.

2.மற்ற பிரிவினருக்குத் திட்ட மதிப்பீட்டில் 5% தனது பங்களிப்பாகக் கொடுக்க வேண்டும்.

மானியம்
திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 25 இலட்சம் மானியமாக வழங்கப்படும்.

You'r reading படித்த இளைஞர்கள் தொழில் முனைவோராக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் ஒரு சிறப்புத் திட்டம்...! Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை