கொரோனா தொற்று இந்தியா முழுவதும் இன்னமும் முடிந்த பாடில்லை. தலைவலி காய்ச்சல் போல் அதுவும் ஒரு பரவலான நோய் என்றளவுக்கு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உருவாகி விட்டது. சில மாதங்களுக்கு முன்பு வரை தனது சக்கரா படத்தின் டீஸர், எடிட்டிங் பணிகளில் உடனிருந்து கவனம் செலுத்தி வந்த விஷால் திடீரென்று சத்தம் காட்டாமல் விலகி இருந்தார். அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத நிலையில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வந்தார். அதில் குணம் ஆன பிறகு அவரே தனக்கும் தன் தந்தை ஜிகே ரெட்டிக்கும் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தற்போது மூவரும் குணமாகி விட்டோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் விஷாலுக்கு நேற்று பிறந்த தினம் வீட்டிலிருந்த அவருக்குத் தந்தை ரெட்டி கேக் ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். விஷாலைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முடியாவிட்டாலும் அவரது ரசிகர்கள் நற்பணிகளில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் சென்னை கீழ்பாக்கம் மெர்சி ஹோமில் உள்ள முதியோர்களுக்கு மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், சென்னை மாவட்ட தலைவர் ராபர்ட் உணவு வழங்கினார்.வடசென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் சென்னை மாநகராட்சி நகர்ப்புற வீடற்றவர்களுக்கான காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், வடசென்னை மாவட்ட தலைவர் சீனு உணவு வழங்கினார்.
தென் சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் மேற்கு மாம்பலம் காக்கும் கரங்களில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன், தென் சென்னை மாவட்ட தலைவர் ராஜா உணவு வழங்கினர்.