கொரோனாவில் குணமான இசை அமைப்பாளர் தானம் செய்த பிளாஸ்மா..

Music Director Keeravani Plasama Donation

by Chandru, Sep 1, 2020, 19:43 PM IST

சமீபத்தில் பாகுபலி பட இயக்குனர் எஸ் எஸ்.ராஜமவுலி கொரோனா பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தார். அவரது குடும்பத்தினரும் தொற்றுக்குள்ளாகினர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்தனர்.
இந்நிலையில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் உறவினரும் இசையமைப்பாளருமான எம்.எம். கீரவாணி கொரோனா பாதிப்புக்குள்ளானார். அவரும் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினார். இசை அமைப்பாளர் எம்எம் கீரவாணி தற்போது பிளாஸ்மா தானம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வலைத்தள பக்கத்தில், நான் எனது மகன் பைரவருடன் இணைந்து மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்ய வந்துள்ளேன். தற்போது பிளாஸ்மா நன்கொடை அளித்து உள்ளேன். நன்றாக இருக்கிறது. இது ஒரு வழக்கமான ரத்ததானம் செய்வது போல மிகவும் சாதாரணமாக இருந்ததை நான் உணர்ந்தேன். இதில் சிறிதும் பயப்படத் தேவையில்லை என தெரிவித்திருக்கிறார்.
கொரோனாவிலிருந்து குணம் ஆனவர்களின் பிளாஸ்மாவைக் கொண்டு கொரோனா பாதிப்புக் ள்ளானவர்களுக்கு எளிதாக சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.
ஏற்கனவே ராஜமவுலியும் பிளாஸ்மா தானம் செய்வேன் என்று தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி தற்போது எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர். என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் .

You'r reading கொரோனாவில் குணமான இசை அமைப்பாளர் தானம் செய்த பிளாஸ்மா.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை