விறுவிறுப்பான திரைக்கதைக்கும், யதார்த்த காட்சியமைப்பிற்கும் இந்தியாவில் பெயர் போன கேரள சினிமா துறையின் அடுத்த பரிமாணம் c u soon
அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ள பகத் பாசில் நடித்து, தயாரித்து உள்ள படம் c u soon.
ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், மாலா பார்வதி , சைஜீ குரூப் என மொத்தமாகவே டெக்னிக்கல் குழுவோடு சேர்த்து 35 பேரை வைத்து மட்டுமே படத்தை இயக்கியுள்ளார் என்னு நின்றே மொய்தீன் பட இயக்குனர் மகேஷ் நாராயண்.
இணையதளம் நம் வாழ்வின் அங்கமாக மாறிவிட்ட நேரத்தில், வெவ்வேறு தேசங்களில் வசிக்கும் மக்களாகிய நாம் வீடியோகாலில் Virtual வாழ்க்கை ஒன்றை வாழ்கிறோம். அந்த virtual வாழ்க்கையையே கருவாக வைத்து முழுக்க முழுக்க வீடியோ கால் மூலமாக கதையை நகர்த்தியது புது முயற்சி. இந்த படம் முழுக்க கோவிட் லாக்டவுணின் போது ஐபோன் மூலமாக எடுக்கப்பட்டது என்பது கூடுதல் செய்தி. படத்தின் எடிட்டர் தீயாக வேலை செய்து காட்சிகளை தத்ரூபமாக எடிட் செய்து அசத்தி இருக்கிறார்.
வங்கி ஊழியரான ரோஷன் ஒரு சமூக இணையதளத்தின் மூலம்
தர்ஷனாவை சந்திக்கிறார். அதன் பின்பு அவர்களை சுற்றி நிகழும் சம்பவங்களை வைத்து படம் இறுதி வரை நகர்கிறது.
திரில்லர் பட வரிசையில் இந்த இக்கட்டான வேளையில் ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டு இருப்பது சவாலான விஷயம்.
லாக்டவுணில் ஐபோனில் படத்தை தயாரித்து, OTT யில் ரிலீஸ் செய்து இருப்பது, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழமொழியை ஞாபகப்படுத்துகிறது
பலே c u soon team பலே