பரீட்சை எழுத முகமூடி அணிந்து வந்த நடிகை.. மாணவிகள் சூழ்ந்து கொண்டனர்..

Advertisement

பல நடிகர், நடிகைகள் நடிக்க வந்த பிறகு மற்ற வேலைகளை மூட்டை கட்டி வைத்துவிடுகின்றனர். அடுத்துப் படிப்பது பற்றி எல்லாம் யோசிப்பதில்லை. ஆனால் மலையாள நடிகைகள் தமிழில் நடித்து பிரபலம் ஆன பிறகும் படிப்பை மட்டும் விடுவதில்லை. பெரும்பாலும் பட்டப் படிப்பை முடித்து விடுகிறார்கள். நவ்யா நாயர், லட்சுமி மேனன் உள்ளிட்ட பல நடிகைகள் படிப்புக்காக நடிப்புக்கு கேப் கொடுத்து டிகிரி முடித்தனர். மாரி2 நடிகை சாய் பல்லவி. தான் நடித்த முதல் படமான பிரேமம் படத்தை முடித்தவுடன் தேடி வந்த பட வாய்ப்புகளை ஒதுக்கிவிட்டு டாக்டர் படிப்புக்காக வெளி நாடு சென்றார். அதைப் படித்து முடித்து வந்த பிறகு தான் மீண்டும் நடிக்க வந்தார். தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தனுஷுடன் 'மாரி 2' படத்தில் 'ரவுடி பேபி' பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டம் யூடியூபில் பல மில்லியன் வியூஸ்களை பெற்று சாதனை படைத்தது. அவரது அட்டகாசமான நடனம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.சாய் பல்லவி ஒரு எம்.பி.பி.எஸ் மாணவி. இவர் இப்போது திருச்சியில் உள்ள எம்.ஏ.எம் கல்லூரியில் ஒரு தேர்வு எழுத வந்தார். கொரோனா லாக்டவுன் என்பதால் முகமூடி அணிந்து சக மாணவிகளோடு மாணவியாக அவர் கலந்தார். முதலில் அவரை யாரும் அடையாளம் காணவில்லை பிறகு அடையாளம் கண்டுகொண்டதும் தேர்வு எழுதி முடித்துவிட்டு வந்தவுடன் அவரை சூழ்ந்துக்கொண்டனர். செல்பி எடுக்கக் கேட்டபோது சிரித்தபடி போஸ் அளித்தார்.

திறமையான நடிகை சாய் பல்லவி விரைவில் நாக சைதன்யாவுடன் வரவிருக்கும் தெலுங்கு திரைப்படங்களான 'லவ் ஸ்டோரி' மற்றும் ராணாவுடன் 'விராட்டா பர்வம்' படங்களில் நடித்து வருகிறார்.தமிழில் மாரி 2 படத்துக்கு பிறகு சூர்யா நடித்த என் ஜி கே படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் நடித்தார். ஆனால் சாய் பல்லவியிடம் மாரி 2 அளவுக்கு அட்டகாசமான நடனத்தை இப்படத்திலும் எதிர் பார்த்தார்கள் ஆனால் அதில் சாய் பல்லவி ரொம்பவே அடக்கி வாசித்திருந்தது ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?

READ MORE ABOUT :

/body>