பூ படம் மூலம் அறிமுகமானார் பார்வதி. நடிப்பிலும் மற்றும் பொது செயல் முறைகளிலும் புயல் போன்றவர். சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்கும் போது அதை எதிர்த்து குரல் கொடுத்துத் தீர்வு காண முயல்பவர். மல்லுவுட்டில் மீ டு விவகாரங்கள் வெளியில் வந்தபோதும், பிரபல நடிகர் ஒருவர் படத்தில் பெண்ணை இழிவாக வசனம் பேசியதற்காக அவரையும் எதிர்த்து குரல் கொடுத்தார்.
செயலில் காட்டும் கடுமையில் அதை உடற்கட்டிலும் பராமரிக்கிறார். நடித்த படம் தான் பூ ஆனால் அவர் வைரம் பாய்ந்த உடம்புபோல் உறுதியான தேகம் கொண்டவர். கொரோனா லாக்டவுனில் வீட்டில் அவர் ஜிம் பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். பார்த்தாலே அதன் கடினம் தெரிகிறது. பார்வதி அப்படங்களைத் தனது சமூகவலை தள பக்கத்தில் வெளியிட்டு கடுமையாக முயன்றால் கடுமையே விலகி ஓடும் என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இது உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருத்தமான வார்த்தை என அவரது ரசிகர்கள் அவரது தோற்றத்துக்கும் பயிற்சிக்கும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
தமிழில் அதிக கவனம் செலுத்தாத பார்வதி மலையாளத்திலும் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு நடிக்கிறார். அதுபோன்ற படங்கள் வராவிட்டால் அவர் வீட்டில் வேறு வேலை பார்க்கத் தொடங்கி விடுவார். கடந்த ஆண்டு அவர் நடித்த டாக்டர் அன்னு பேச வைக்கும் படமாக அமைந்தது. தற்போது ராச்சியம்மா மற்றும் ஹலால் லவ் ஸ்டோரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.