பெரும்பாலான பெரிய ஹீரோக்களின் படங்களில் நேரடியாக அல்லது மொழி மாற்றம் செய்யப்பட்டு தெலுங்கு, மலையாள மொழியில் வெளியிடப்படுகிறது. நகைச்சுவை நடிகர்கள் படப்பிடிப்புக்கு வந்தோமா, கல்லா கட்டினோமா என்று தான் கடந்த சில ஆண்டுகள் வரை இருந்து வந்தனர். வடிவேலு கூட பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைச் சேர்த்தார். ஆனால் அவர் கூட பிறந்தாள் கொண்டாட்டம், சமூக சேவை, மரம் நடுதல், அன்னதானம் போன்ற நற்பணிகளைச் செய்ததாகத் தெரியவில்லை. கொரோனா ஊரடங்கில் நடிகர் சூரி தந்து வீட்டிலிருந்தபடி பிறந்தாள் கொண்டாடினாலும் அவரது ரசிகர் மன்றத்தினர் பலவேறு மாவட்டங்களில் மரம் நடுதல், ரத்ததானம். கொரோனா உதவிகள், அன்னதானம் எனப் பல சேவைப் பணிகள் செய்து அசத்தினர்.
தற்போது யோகிபாபு காமெடியனாக கலக்கி வருகிறார். இவரும் ஷூட்டிங் வந்தோமா அடுத்த வேலையைப் பார்த்தோமா என்றிருக்கிறார். யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கிறார். ஆனால் அவருக்கு மச்சம் உச்சத்தில் இருக்கிறது. அவர் இல்லாத படமே இல்லை என்றளவுக்கு பெரும்பாலான படங்களிலும் நடிக்கிறார். தவிர சோலோ ஹீரோவாகவும் அவ்வப்போது நடிக்கிறார். அவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் 3 மொழிகளில் வெளியாகிறது.தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மொழிகளில் சாட்டிலைட் வழியாகவும் ஒடிடி இணையத்தின் மூலமும் யோகி பாபு நடித்த 'தர்ம பிரபு' வெளியாகிறது.யோகி பாபு நடித்து சென்ற ஆண்டு தமிழில் வெளியான 'தர்ம பிரபு' வித்தியாசமான கதைக் களத்தில் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த படம்.பரவலான வசூல்கள், பார்ப்பவர்கள் மத்தியில் விசில்கள் என்று அள்ளிக் கொண்ட படம்.
எமலோகத்தில், எமன் பதவி காலியாகிறது. அடுத்த எமன் யார்?புதிய எமனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், அனுபவம் அடிப்படையில் சித்ரகுப்தனாக உள்ள கருணாகரனும் போட்டியிடுகிறார்கள். இவர்களில் யார் எமன் பதவியைப் பெறப்போகிறார்கள்? ஆட்சியைப் பிடித்தது மட்டுமல்லாது, தன் தகுதியை எப்படி நிரூபித்துக் கொள்ளப் போகிறார்கள்? என்பதைக் காட்சிகளாக்கிக் கலகலப்பாகச் சொல்வதே 'தர்ம பிரபு' படத்தின் திரைக்கதை.இப்படம் தெலுங்கு ,மலையாளம், கன்னட மொழிகளில் மொழிமாற்றுப் படமாக உருவாகியுள்ளது. இந்தக் கொரோனாவின் லாக்டவுன் காலத்தில் சாட்டிலைட் வழியாகவும் OTT மூலமும் வெளியிடப்படவுள்ளது. தமிழில் தயாரித்த தயாரிப்பாளர் பி. ரங்கநாதனின் ஸ்ரீவாரி பிலிம் நிறுவனம் மூன்று மொழிகளிலும் இம்மொழிமாற்றுப் படங்களைத் தயாரித்துள்ளது.
தெலுங்கில் வசனங்கள் , பாடல்களை எழுதி இருப்பவர் அட்ஷத் .கன்னடத்தில் வசனங்களுடன் பாடல்களையும் உமா எழுதியுள்ளார். மலையாளத்தில் வசனம் பாடல்களை நிஷாத் எழுதியுள்ளார்.எமனாக யோகிபாபு நடிக்க , எமனின் அப்பாவாக ராஜேந்திர பிரசாத் , சித்திர குப்தனாக கருணாகரன்,சிவனாக பிரம்மானந்தம் என நடித்திருக்கிறார்கள்.இயக்கம் -முத்துக்குமாரன், ஒளிப்பதிவு -மகேஷ் முத்துசாமி, இசை- ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டர்- சான் லோகேஷ்.