ரஜினியின், அண்ணாத்த தமிழ் புத்தாண்டில் ரிலீஸ், விரைவில் மீண்டும் படப்பிடிப்பு ..

by Chandru, Sep 4, 2020, 16:32 PM IST

கொரோனா தொற்று காரணமாக எல்லா படப்பிடிப்பும் முடங்கி இருந்தது. விறுவிறுப்பாக நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படமும் நிறுத்தப்பட்டது. இப்படத்தைச் சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் கொரோனா விதிமுறைகளுடன் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அரசு அனுமதி அளித்தது. விஜய் ஆண்டனி படம் உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது. ஆனால் ரஜினியின் அண்ணாத்த, அஜீத்தின் வலிமை படங்களின் படப்பிடிப்பு தொடங்குவது பற்றி அறிவிப்பு ஏதும் வெளியாகாமலிருக்கிறது. 2021 ஜனவரியில் மட்டுமே மீண்டும் தொடங்கலாம் என்ற எண்ணத்தில் படக்குழு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அண்ணாத்த படத்தைப் பொறுத்த வரை ஷூட்டிங் தொடங்கினாலும் ரஜினி இல்லாத காட்சிகள் படமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது படப்பிடிப்பை விரைவில் தொடங்குவதற்கான ஆய்த பணிகள் நடக்கிறதாம். சென்னையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளார்களாம். அதற்காக அரங்கம் அமைக்கும் பணிகள் ஈ.சி.ஆரில் நடைபெற்று வருவதாகவும், ரஜினிகாந்த் சம்பந்தப்படாத காட்சிகள் வரும் மாதங்களில் படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் காம்பினேஷன் காட்சிகள் செட் வேலை முடிந்ததும் படமாக்கப்படும். மேலும் ஏற்கனவே படமாக்கப்பட்ட பகுதிகளுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைந்து முடிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் ஜனவரியில் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று இதற்கிடையில் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் ஏற்கனவே 50 சதவீத படமாக்கி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள காட்சிகள் ஜனவரியில் படமாக்கப்படுகிறது.
முன்னதாக அண்ணாத்த வரும் தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டது. பின்னர் பொங்கல் 2021 இல் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ​தற்போதுள்ள நிலையில்​ தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அண்ணாத்த பட ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 'அண்ணாத்த' படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி எனப் பலர் நடித்துள்ளனர். டி இமான் இசை அமைக்கிறார். கிராமப்புற பின்ணயிலான குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது.


More Cinema News