வில்லன் நடிகரை அரசியலில் ஈடுபட வரிந்துகட்டி அழைக்கும் கட்சிகள்.. என்ன சொல்கிறார் தெரியுமா?

Will Actor Sonu sood Join National Politics

by Chandru, Sep 4, 2020, 18:56 PM IST

கொரோனா ஊரடங்கின் போது ஆரம்பக் கட்டத்தில் பல நடிகர்கள் தங்களின் திரையுலகம் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் லட்சம், கோடிகளில் உதவி அளித்தனர். அந்த உதவியுடன் ஒதுங்கிக் கொண்டவர்கள் பிறகு அதுபற்றி அக்கறை காட்டாமல் ஒதுங்கினார்கள்.
ஆனால் கொரோனா பரவிய வேகத்தையும் தாண்டி ஒரு நடிகர் ஓடி ஓடி மக்களுக்கு யார், எந்த ஊர் என்றெல்லாம் பார்க்காமல் உதவிக் கொண்டிருந்தார். அவர் வேறுயாருமல்ல வில்லன் நடிகர் சோனு சூட்.. இவர் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி, சிம்புவின் ஒஸ்தி, பிரபு தேவாவின் தேவி போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தவர். இந்த சினிமா வில்லன் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் செய்த தொடர்ச்சியான உதவி காரணமாக நிஜ ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்திருக்கிறார்.

வெளியூர்களிருந்து புலம் பெயர்ந்து வந்து தவித்த பல்லாயிரக் கணக்கானவர்களை அவர்களின் சொந்த ஊருக்கு பஸ், ரயில், விமானத்தில் அனுப்பி வைத்தார். மகள்களை ஏரில் பூட்டி நில உழுது கஷ்டப்பட விவசாயிக்கு உடனடியாக டிராக்டர் வாங்கி அனுப்பினார். மருத்துவர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் தங்க இடம் கொடுத்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்களைத் தனி விமானத்தில் அழைத்து வந்தார். இந்தியா முழுவதும் அவர் மக்களின் கவனத்தை ஈர்த்தார். நிஜ ஹீரோ என மக்களிடம் பெயரெடுத்து விட்டார். சோனு சூட் சம்பாதித்துள்ள நல்ல பெயரை அப்படியே தங்கள் கட்சியின் ஓட்டுக்களாக மாற்ற அவரை தங்கள் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபட அழைப்பு விடுத்து வருகின்றன.

அரசியலில் ஈடுபடுவீர்களா? எந்த கட்சியில் சேர்வீர்கள் என்றதற்கு சோனு சூட் கூறியது:
அரசியலில் சேர கேட்டுப் பல வருடங்களாகவே எனக்குத் தேசிய கட்சிகளிலிருந்து அழைப்பு வருகிறது. நடிகனாக இருப்பதால் அரசியலுக்கு வர சிந்திக்கவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் சவாரி செய்ய விருப்பம் இல்லை. ஒருவேளை அரசியலுக்கு நான் வந்தால் அதற்காக 100 சதவீதம் நான் உழைப்பைக் கொடுப்பேன். எல்லோரும் பிரச்சனை இல்லாமல் வாழ்கிறார்களா என்பதை உறுதி செய்வேன்.

இவ்வாறு சோனு சூட் தெரிவித்தார்.

You'r reading வில்லன் நடிகரை அரசியலில் ஈடுபட வரிந்துகட்டி அழைக்கும் கட்சிகள்.. என்ன சொல்கிறார் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை