த்ரில்லர் பட தயாரிப்பாளர் ஆகிறாரா பிரபல நடிகை..

by Chandru, Sep 4, 2020, 19:18 PM IST

ரஜினிமுருகன், சர்க்கார், சண்டக்கோழி 2, தானா சேர்ந்த கூட்டம், பெண்குயின் என தமிழிலும், தெலுங்கிலும் வரிசையாக தம் கட்டி பிஸியாக நடித்துக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் திடீரென்று இந்தி படங்களில் நடிக்கச் சென்று இருந்த தமிழ் பட வாய்ப்புகளை கோட்டை விட்டார். இந்தி படமும் இல்லாமல் போனது. மீண்டும் புதிதாக தொடங்குவதுபோல் தமிழில் நடிக்க கீர்த்தி தொடங்கினாலும் அதில் அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் காத்திருந்தது. ரஜினியின் அண்ணாத்த படத்தில் ஜாக்பாட் வாய்ப்பு பெற்றார்.
சில தினங்களுக்கு முன் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் தெலுங்கு படப் பிடிப்பில் பங்கேற்க ஐதராபாத் புறப்பட்டு சென்ற கீர்த்தி மாஸ்க், கிளவுஸ் அணிந்து ஐதராபாத் விமான நிலையத்தில் வந்திறங்கியதை அங்கிருந்தவர்கள் புகைப்படம் எடுத்து நெட்டில் வெளியிட்டனர்.


இதற்கிடையில் த்ரில்லர் கதை ஒன்றைக் கேட்டு மிகவும் ஆர்வம் அடைந்து அந்த படத்தை கீர்த்தியே தயாரித்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அதை கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது,தயாரிப்பாளர் ஆகும் எண்ணம் எனக்கு இல்லை. அது முழுக்க வதந்திதான். நான் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறேன் என்றார்.


More Cinema News

அதிகம் படித்தவை