சுஷாந்த் வழக்கில் பேச போலீஸ் பாதுகாப்புடன் பிரபல நடிகைக்கு அனுமதி தர வேண்டும்.. பா ஜ க மந்திரி ரெக்கமெண்டேஷன்..

by Chandru, Sep 6, 2020, 10:09 AM IST

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14ந்தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு வாரிசு நடிகர், நடிகைகள் அவரை அவமானப்படுத்திய தால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார். பின்னர் சுஷாந்த் தற்கொலை வழக்கில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. அவருக்கு போத மருந்து தரப்பட்டு தற்கொலைக்கு தூண்டபட்டார் என தகவல் வெளியானது.


இந்நிலையில் கங்கனா ரனாவத் பாலிவுட்டில் போதை பொருள் பயன்பாடு உள்ளது. பிரபலங்களின் பார்ட்டிகளில் இலவசமாக போத மருந்து தரப்படுகிறது என்றார் இதையடுத்து மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார். கங்கனாவுன் இந்த் பேச்சு மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சிக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மும்பை அல்லது மராட்டியத்தை யாராவது இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் முயன்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.


வெளியூரில் இருக்கும் கங்கனா வரும் 9ந்தேதி மும்பைக்கு விமானத்தில் வந்து இறங்கினால் சிவசேனா பெண் உறுப்பினர்கள் கன்னத்தில் அறைந்திடுவார்கள் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் எச்சரிக்கை விடுத்தார். அக்கட்சியின் எம்.எல்.ஏ. பிரதாப் சர்னாயக், கங்கனா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்.
இந்நிலையில், பா.ஜ.கவின் ஆட்சி நடை பெறும் அரியானா மாநிலத்தில் உள்துறை மந்திரியாக இருக்கும் அனில் விஜ் கங்கனாவுக்கு ஆதராவாக குரல் எழுப்பி உள்ளார். அவர் கூறும்போது, நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில், உண்மைகளை அம்பலப்படுத்த நடிகை கங்கனா ரனாவத் அனுமதிக்கப்பட வேண்டும். மேலும் கங்கனா ரனாவத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அரியானா அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார்.


More Cinema News

அதிகம் படித்தவை