ஹிந்தி தெரியாது போடா டிஷர்ட் வைரல்.. வெளுத்துக்கட்டும் இசை அமைப்பாளர், நடிகர்..

Yuvan Shankar Raja Metro Shirish Hindi Theriyathu Poda T shirt Viral

by Chandru, Sep 6, 2020, 11:42 AM IST

'ஹிந்தி தெரியாது போடா என ஒரு நடிகர் சொல்ல. நான் தமிழ் பேசும் இந்தியன் என ஆதரவு குரல் கொடுத்திருக்கிறார் பிரபல இசை அமைப்பாளர்.
தேசிய கட்சிகள் இந்தியை தமிழகத்தில் திணிக்கும் முயற்சியை ஆண்டாண்டாக நடத்திக்கொண்டிருக்கின்றன. இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் இந்தி திணிப்பை எப்படி முறியடிக்கலாம் என்று நம் அரசியல் தலைவர்கள் வழிகாட்டி தந்துள்ளனர். கடந்த ஆண்டில் இப்படியொரு முயற்சியை மத்திய அரசு முன்னெடுத்த போது அதை எதிர்க்க தமிழக அரசியல் வாதிகள். இளைஞர் பட்டாளம் தயாரானது. அதைக்கண்டு திணிப்பு முயற்சி தலைதெறிக்க ஓட்டம் பிடித்தது.
பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், போன்ற படங்களை இயக்கிய வெற்றி மாறன் சமீபத்தில் இந்தி தெரியாதாதால் தன்னை டெல்லி விமான நிலையத்தில் ஒரு அதிகாரி அவமானபடுத்திய சம்பவத்தை கூறினார். அதாவது வெளிநாட்டு கலை நிகழ்ச்சி முடித்து விட்டு டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய வெற்றி மாறனிடம் அங்கிருந்த அதிகாரி ஏதோ கேட்க அதற்கு வெற்றிமாறன் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். உடனே அந்த அதிகாரி, இந்தி தெரியாதா? இந்தியாவின் தாய் மொழியை எப்படி கற்காமல் இருக்கலாம். தமிழர்களும், காஷ்மீர் வாசிகளும்தான் இந்தியாவை பிளவுபடுத்தும் தீவிரவாதிகள் என இஷ்டத்துக்கு வெற்றி மாறனை திட்டினார். அதற்கு வெற்றி மாறன், எது தாய் மொழி. எனது தாய் பேசுவது தமிழ் அதுதான் எனது தாய் மொழி என்றார். இதில் கோபம் அடைந்த அந்த அதிகாரி, வெற்றிமாறனை. தூரமாக போய் நில்.. என்று கூறி 45 நிமிடம் காக்கவைத்தார்.
வெற்றிமாறனை அவமாபனப்படுத்திய சம்பவம் தவிர அதற்கு முன்னாதாக இந்தப் பிரச்சினையை முதன் முதலில் பொதுவெளியில் அம்பலப்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் திமுக எம்பி கனிமொழிதான். விமான நிலையங்கள், மத்திய அரசு நடத்தும் கருத்தரங்குகள் என அனைத்து இடங்களிலும் இந்தி பேசத் தெரியாதவர்களை இழிவுபடுத்தும் போக்கு அதிகரித்து வருவதை பகிரங்கமாக கண்டித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்களும் இந்தி தெரியாததால் தாங்கள் பட்ட அவமானத்தை சொல்லத் தொடங்கிர்கள்.


இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவும், நடிகர் மெட்ரோ சிரிஷும் இந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய டிஷர்ட் அணிந்து பேசிக் கொண்டு நிற்கும் படம் சமூகவலைத் தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் மெட்ரோ சிரிஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த இப்படத்தை, யுவன் சங்கர் ராஜா ரீடிவீட் செய்திருந்தார்.
பிரபல இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்திக்கு எதிரான குரலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருப்பது வைரலாகி வருகிறது. யுவனும் நடிகர் மெட்ரோ சிரிஷும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு புகைப் படத்தை வெளியிட்டிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அதில் யுவன் அணிந்திருக்கும் டிஷர்ட்டில், “i am a தமிழ் பேசும் Indian” என்றும், நடிகர் மெட்ரோ சிரிஷ் அணிந்திருக்கும் டிஷர்ட்டில் “Hindi Theriyathu Poda!!!(ஹிந்தி தெரியாது போடா) என்றும் எழுதப்பட்டிருக்கிறது. இந்த படம் நெட்டில் வைராகி தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறது.
யுவனின் இந்த மேசேஜை திமுக எம்பி கனிமொழி Interesting எனக் குறிப்பிட்டு, தம்ஸ் அப் குறியுடன் ரி டிவீட் செய்துள் ளார்.

You'r reading ஹிந்தி தெரியாது போடா டிஷர்ட் வைரல்.. வெளுத்துக்கட்டும் இசை அமைப்பாளர், நடிகர்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அதிகம் படித்தவை