பிரபல நடிகையை உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க மிரட்டிய இயக்குனர்..

by Chandru, Sep 7, 2020, 10:19 AM IST

வாரணம் ஆயிரம், வேட்டை, அசல், வெடி போன்ற படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இந்தி, தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.இந்தி படங்களில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை பற்றி சில நடிகைகள் அவ்வவ் போது தெரிவிக்கின்றார். அதுபோல் சமீரா ரெட்டி முத்தக்காட்சியில் நடிக்க மிரட்டப்பட்டது பற்றித் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறிய தாவது: கதை கேட்டு பிடித்துப் பிறகு தான் நடிக்க ஒப்புக்கொண்டு வந்தேன். இந்தியில் அப்படித் தான் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால் திடீரென்று காட்சியைப் படமாக்கும்போது லிப் டு லிப முத்தம் கொடுத்து நடிக்க வேண்டும் என்றார் இயக்குனர்.

நான் அதிர்ச்சி அடைத்தேன். கதை சொல்லும்போது இதையெல்லாம் சொல்லவில்லையே என்று சொல்லி நடிக்க மறுத்தேன் .ஏற்கனவே முசாபிர் படத்தில் நடித்திருக்கிறீர்களே. அதனால்தான் கேட்கிறோம் என்றார்கள் அவ்வாறு நடிக்கவில்லை என்றால் உங்களைப் படத்திலிருந்து நீக்கி விட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்வோம் என்கிறார்கள்.
அதேபோல் இன்னொரு சம்பவம் நடந்தது.படப்பிடிப்பில் எனது காட்சி முடிந்தவுடன் நான் என் வேலை உண்டு என்றிருப்பேன். யாருடனும் அரட்டை அடிக்க மாட்டேன். அதற்காக ஒரு நடிகர் கோபித்துக் கொண்டார். நீங்கள் படப்பிடிப்பில் ஜாலியாக இருப்பதில்லை உங்களுடன் நடிப்பது போரடிக்கிறது. இனி உங்களுடன் நடிக்க மாட்டேன் என்று கூறினார். எனக்கு ஷாக்காக இருந்தது பிறகு அந்த நடிகருடன் நான் நடிக்க மறுத்துவிட்டேன்
இவ்வாறு சமீரா ரெட்டி கூறினார். சமீரா ரெட்டி தற்போது திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆக இருக்கிறார்.

READ MORE ABOUT :

More Cinema News