லாரன்ஸ் எதிர்ப்பால் அக்‌ஷய் குமார் திகில் படம் ஒடிடி ரிலீஸிருந்து வெளியேறுகிறது..

by Chandru, Sep 7, 2020, 13:19 PM IST

தமிழில் வெளியான முனி: காஞ்சனா படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்தார். இதில் திருநங்கை வேடத்தில் சரத்குமார் நடித்தார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. தற்போது இந்தியில் இப்படம் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்கி இந்தியில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார் லாரன்ஸ். சரத்குமார் ஏற்று நடித்த திருநங்கை வேடத்தை இந்தி நடிகர் அக்ஷய்குமார் ஏற்றிருக்கிறார். ஹீரோயி னாக கியாரா அத்வானி நடிக்கிறார்.


லக்‌ஷ்மி பாம் படம் முடிந்து திரைக்கு வரவிருந்த நிலையில் ஊராடங்கு காரண மாக தியேட்டர்கள் மூடப்பட்டன. இதை யடுத்து இப்படத்தை ஒட்டி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.


ஒடிடி தளத்தில் லக்‌ஷ்மி பாம் படம் ரிலீஸ் செய்ய அக்‌ஷய் குமார் பேச்சு வார்த்தை நடத்தினார். செப்டம்பர் 9 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக் கப்பட்டது. ஆனால் ஒடிடியில் வெளியா வதை இயக்குனர் லாரன்ஸ் உள்ளிட்ட சிலர் விரும்பவில்லை என்று பேச்சு எழுந் துள்ளது. இதையடுத்து லக்‌ஷ்மி பாம் ஒடிடியில் ரிலீஸ் ஆவதற்கு முன் தியேட் டரில் வெளியிடுவது பற்றி இயக் குனர், தயாரிப்பாளர். ஆகியோர் ஹீரோ விடம் பேசி வருகின்றனர். அவரும் அதையே விரும்புவதாக கூறப்படுகிறது. இதையடுத்து லக்‌ஷ்மி பாம் ஒடிடியில் வெளியாவதிலிருந்து பின் வாங்குகிறது.

READ MORE ABOUT :

More Cinema News

அதிகம் படித்தவை