“காலையிலே இப்படி ஒரு சர்ப்ரைஸா , அனைவருக்கும் நன்றி” - தனுஷ் பட ஹீரோயின்..!

by Chandru, Sep 7, 2020, 13:12 PM IST

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஜெகமே தந்திரம். இதில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். மும்பை டான் அண்டர் வேர்ல்டு கதையாக உருவாகும் இதில் தனுஷின் வித்தியாசமான கெட்டப்பில் ஸ்டில்கள் ஏற்கெனவே வெளியாகின. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமியின் பிறந்த நாளை யொட்டி அவரது புதிய ஸ்டில்லை படக் குழு வெளியிட்டது. அதைக்கண்டு ஐஸ்வர்யா லட்சுமி குஷியாகி டீமிற்கு ஒரு கததப்பான அணைப்பு கொடுத்து நன்றி தெரிவித்திருக்கிறார்,.

இதுபற்றி ஐஸ்வர்யா லக்ஷ்மி வெளி யிட்டுள்ள மெசேஜில், ஜெமே தந்திரம் குழுவுக்கு நன்றி. காலை எழுந்தவுடன் இன்பத்துடன் கூடிய ஒரு அனுபவமாக உணர்ந்தேன். ஜெகமே தந்திரத்தில் என்னுடைய போஸ்டர் ஸ்டில் என்னை ஆச்சரியப்படுத்தியது. அதைப் பார்த்ததும் படப்பிடிப்பு நாட்கள் நினைவில் அலை பாயத் தொடங்கிவிட்டது. உங்கள் அனைவரையும் ரெம்பவே மிஸ் செய்கி றேன். எல்லோருமே திறமையானவர்கள். தொழில்நுட்பக் குழுவினர், நடித்த கலைஞர்கள். உதவி இயக்குனர்கள், ஒய் நாட் படக் குழு (Ynot from Team). அருமை யான ஆங்கிலக் குழு !! ...


இதே படத்தை அதே குழுவினருடன் மீண்டும் படமாக்கலாம் என்று நான் விரும்புகிறேன். அதிகாலையில் என்னை மென்மையாக்கியதற்கு நன்றி. நான் உங்களை நேசிக்கிறேன். எனது பட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்பான அரவணைப்புகள். இந்த காலங்களில் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஜெகமே தந்திரத்தை காண காத்திருக்கிறேன்.
இவ்வாறு ஐஸ்வர்யா லட்சுமி கூறி உள்ளார்.

READ MORE ABOUT :

More Cinema News