தமிழ், கன்னடம் மற்றும் மலையாளத்தில் அதிரடி திரில்லர் வி வெளியானது.. ஹீரோ, இயக்குனர் பேட்டி..

by Chandru, Sep 7, 2020, 17:02 PM IST

மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கத்தில் தெலுங்கு திரில்லர் நாயகர்களான நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் சுதீர் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, நிவேதா தாமஸ் மற்றும் அதிதி ராவ் ஹைடாரி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.இந்தியாவிலும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் உள்ள ப்ரைம் உறுப்பினர்கள் பிரத்தியேகமாக அமேசான் பிரைம் வீடியோவில் தெலுங்கு படம் V-ஐ தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யலாம்.

நானி மற்றும் சுதீர் பாபு நடித்த தெலுங்கு த்ரில்லர் வி, பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது 25- வது படத்தில் நேச்சுரல் ஸ்டார்' நானி போலீஸ் கதாபாத்திரத்தில் சுதீர் பாபுவுடன் இணைந்து அதிரடியான சேஸிங்க் காட்சிகளில் மிரட்டியுள்ளதைக் காண ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருந்தனர். தற்போது அமேசான் பிரைம் வீடியோ தமிழ், மலையாளம் மற்றும் கன்னட ஆடியோக்களுடன் படத்தை வெளியிட்டுள்ளது. அதிரடி-த்ரில்லர் இப்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கிறது.

இதுபற்றி நடிகர் நானி பேசும்போது, இது ரசிகர்களுக்கு நாங்கள் அளிக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி. இந்த படத்தை நாங்கள் ரசித்து உருவாக்கியது போலவே ரசிகர்களும் இதை அனுபவித்துப் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன். என்றார்."எப்போதுமே வி என் மனதிற்கு நெருக்கமான புராஜெக்டாக இருக்கும் மற்றும் இந்த படத்திற்குக் கிடைத்த வரவேற்பும் அதிகமாக இருக்கிறது. தெலுங்கு பார்வையாளர்கள் எங்களை தங்களது அன்பினால் திக்குமுக்காட வைத்துவிட்டனர். மேலும் இந்த ரசிகர் வட்டத்தை அதிகமாக்கப் படத்தைத் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் டப் செய்து வெளியிடுவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. முடிந்தவரை நிறைய மக்களை இந்த அதிரடி திரைப்படம் அவர்களின் வீட்டிற்கே சென்று மகிழ்விக்கும் என நம்புகிறேன் என்று மோகனா கிருஷ்ணா இந்திரகாந்தி கூறினார்.


More Cinema News

அதிகம் படித்தவை