ஒரு மாணவர் ஒரு மரம் - மத்திய அரசின் பாராட்டைப் பெற்ற பிரபல கல்வி நிறுவனம்...! முதலிடம் பிடித்த எஸ்.ஆர்.எம் !

by Loganathan, Sep 7, 2020, 16:55 PM IST

உன்னத் பாரத் அபியான் திட்டம்

உயர் கல்வி நிறுவனங்களுக்கான கட்டாய சமூகப் பொறுப்பை விரைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்தும் வகையில் அதற்கான வழிகாட்டுதல் மற்றும் திட்ட நடைமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் சமூகப் பொறுப்பை உறுதிப்படுத்தும் வகையில், உன்னத் பாரத் அபியான் (யுபிஏ) 2.0 என்ற திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ் , நாடு முழுவதுமிருந்து 750 உயர் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், கிராமங்களைத் தத்தெடுப்பார்கள்.ஒவ்வொரு கிராமத்திலும் நான்கு துறைகளில் 25 % வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த திட்டம்.செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் இயங்கி வரும் எஸ்.ஆர்.எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் கிராமங்களின் வளர்ச்சிக்கான ஆய்வுப் பணிகளைச் செய்து வருகிறது ‌. இதற்காக அந்த மாவட்டத்தில் உள்ள அஞ்சூர் , பட்ரவாக்கம் , தென்மேல்பாக்கம் , ஒரத்தூர் ,நாட்டரசன் பட்டு , செட்டிபுன்னியம் , கலிவந்தபபட்டு மற்றும் கொளத்தூர் ஆகிய 8 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளது .

இந்த கல்வி நிறுவனம் மத்திய அரசின் " உன்னத் பாரத் அபியான் " திட்டத்தை இந்த கிராமங்களில் செயல்படுத்த 59 திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்தது.அதில் மூன்று திட்டங்களான குடிநீர் சுத்திகரிப்பு திட்டத்தை அஞ்சூரிலும் ,ஒரத்தூர் கிராமத்தில் வீடுகளில் கிடைக்கும் திடக்கழிவு மூலம் எரிவாயு தயாரித்தல் திட்டத்தையும் தென்மேல்பாக்கம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.எனவே உன்னத் பாரத் அபியான் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திய கல்வி நிறுவனங்களில் எஸ்.ஆர்.எம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் எஸ‌.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் " ஒரு மாணவர் ஒரு மரம் " திட்டத்தை மத்திய அரசு வெகுவாக பாராட்டியுள்ளது .


More Special article News

அதிகம் படித்தவை