தியேட்டர் அதிபர்களுக்கு பாரதிராஜா மற்றும் தயாரிப்பாளர்கள் முக்கிய நிபந்தனை .. புதிய படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் இதை செய்யுங்கள்..

by Chandru, Sep 8, 2020, 15:15 PM IST

கொரோனா ஊரடங்கு பெரும் அளவில் தளர்த்தப்பட்டும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி கிடைக்கவில்லை. இதனால் புதிய படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்படுகிறது. எனவே தியேட்டரை விரைந்து திறக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு வருகிறது. ஒருவேளை அனுமதி கிடைத்தாலும் புதிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் அதிபர்களுக்குத் தயாரிப்பாளர்கள் முக்கிய நிபந்தனை விதித்திருக்கின்றனர்.
இதுபற்றி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா மற்றும் பல தயாரிப்பாளர்கள் கையெழுத்திட்டு தியேட்டர் அதிபர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அதன் விவரம் வெளியாகி உள்ளது.

நிபந்தனை பற்றி தயாரிப்பாளர்கள் கடிதத்தில் கூறியிருப்பதாவது:தயாரிப்பாளர்களாகிய நாங்கள்‌ சிறிய தொகை முதல்‌ 60, 70 கோடி வரை ஷேர்‌ வரும்‌ படங்களைத் தயாரித்து வெளியிட்டு வந்திருக்கின்றோம்‌. இனிவரும்‌ காலங்களில்‌ இதுபோல்‌. வருமா என்பது இயலாத காரியம்‌. இப்படிப்பட்ட சூழ்நிலையில்‌ எங்களது படங்களைத் திரையரங்குகளில்‌ திரையிடமுடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்‌. தற்போது படம்‌ எடுத்துக் கொண்டிருக்கும்‌ தயாரிப்பாளர்களும்‌ படம்‌ எடுக்கப்‌ போகும்‌ தயாரிப்பாளர்களும்‌. கலந்து ஆலோசித்து கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்து உங்களுக்கு எங்களது வேண்டு கோளாகத் தெரிவித்துக் கொள்கிறோம்‌. எனவே தாங்கள்‌ தங்கள்‌ சங்க. உறுப்பினர்களுடன்‌ பேசி ஒரு நல்ல முடிவை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்‌.திரையரங்கு உரிமையாளர்களுக்கு வேண்டுகோள்‌. ஹோல்டூ ஓவர்‌ (HoldOver) முறை புதிய பட வெளியீடுகளுக்கு ஒவ்வொரு வாரமும்‌ பின்பற்றப் பட வேண்டும்‌. ஹோல்டூ ஓவர்‌ இருக்கும்‌ படங்களைத் திரையரங்குகள்‌ மாற்றக் கூடாது.ஹோல்டூ ஓவர்‌ சதவீதத்தை நாம்‌ பேசி முடிவு செய்து கொள்ளலாம்‌.

திரையரங்குகளை நீங்கள்‌ லீஸ் (Leace) எடுத்து நடத்துவதில்‌ எங்களுக்கு எந்த ஆட்சேபனையும்‌ இல்லை. ஆனால்‌ கன்பர்மேஷன் என்ற பெயரில்‌ பல திரையரங்குகள்‌ சிலரால்‌ எடுத்து நடத்தப்படும்‌ பொழுது தயாரிப்பாளர்களுக்கான செகண்ட் ரன்/டெபாசிட் போன்ற பல வியாபார சுதந்திரங்கள்‌ பறிபோகின்றன. எனவே மேற்கண்ட கன்பர்மேஷன் செய்பவர்களால்‌ நடத்தப்படும்‌ எந்த திரையரங்குகளிலும்‌ எங்களது படங்களைத் திரையிட இயலாது என்பதைத் தெரிவித்து கொள்கிறோம்‌. மேற்கண்ட அனைத்தும்‌ திரையுலகின்‌ சிறந்த எதிர்காலம்‌ கருதித் தயாரிப்பாளர்களாகிய எங்களால்‌ முடிவு செய்யப்பட்டது. சகோதர சங்கமான திரையரங்க உரிமையாளர்கள்‌ சங்கம்‌ மேற்கண்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து சுமூகமாக நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்‌.

இப்படிக்கு,திரைப்படங்கள்‌ எடுத்து தற்போது வெளியிடத்‌தயாராக இருக்கும்‌ படங்களின்‌ தயாரிப்பாளர்கள்‌, படம்‌ எடுத்துக்‌ கொண்டிருக்கும்‌ மற்றும்‌ எடுக்கப்‌ போகும்‌ தயாரிப்பாளர்களின்‌சார்பில்‌ பிரதிநிதிகள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் கோரிக்கை வைத்திருக்கும் தயாரிப்பாளர்களின் கையெழுத்து பட்டியல் இணைக்கப்பட்டிருக்கிறது.இந்த கடிதம் திருப்பூர்‌ சுப்ரமணியம்‌,(தலைவர்‌.தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள்‌ சங்கம்‌ மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது)


More Cinema News

அதிகம் படித்தவை