கங்கனா கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியதால் பரபரப்பு.. நடிகை - சிவசேனா கட்சியினர் மோதல் முற்றுகிறது..

by Chandru, Sep 8, 2020, 14:44 PM IST

பாலிவுட் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் வாரிசு நடிகர்கள் அவரை அவமானப்படுத்தியது தான் காரணம் எனவும் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக ஆளும் கட்சி முக்கிய பிரமுகரும் மும்பை போலீஸாரும் துணையாக இருக்கிறார்கள் என்றும் கங்கனா புகார் கூறினார். மேலும் பாலிவுட் பார்ட்டிகளில் போது மருந்து தரப்படுகிறது என்றும் கூறினார்.கங்கனாவுக்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறும்போது, மகாராஷ்டிராவையும், மும்பை போலீசையும் கங்கனா அவமானப்படுத்தி உள்ளார். பயம் இருந்தால் அவர் மும்பைக்குத் திரும்ப வரவேண்டாம் எனத் தெரிவித்தார்.

அதற்குச் சவால் விடுவதுபோல் பதில் அளித்த கங்கனா, மும்பைக்கு வரவேண்டாம் என்று பலரும் எச்சரிக்கிறார்கள், பயமுறுத்துகிறார்கள். வருகிற செப்டம்பர் 9-ந்தேதி (நாளை) மும்பை வருகிறேன் முடிந்தால் என்னைத் தடுங்கள் எனத் தெரிவித்தார்.இந்நிலையில் கங்கனா ரனாவத்துக்கு ஆபத்து இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அரியானா உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதையடுத்து கங்கனாவுக்கு ஒய் பிளஸ் செக்யுரிட்டியை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருக்கிறது. இமாச்சல பிரதேசம் மனாலியில் தற்போது கங்கனா தங்கி இருக்கிறார். அந்த வீட்டுக்கு போலீஸ் காவல் போடப்பட்டிருக்கிறது.

கங்கனாவை பாஜகவினார் பின்னால் இருந்து இயக்கி வருகின்றனர் என உத்தவ் தாகேரேவின் சிவசேனா கட்சியினர் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரேவின் மகன் ஆதித்யா தாக்ரேவை சுஷாந்த் தற்கொலை வழக்கில் கங்கனா மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசி வருவதால் கங்கனாவுக்கும் சிவசேனாவுக் கும் இது நேரடி மோதலாக மாறி இருக்கிறது.சில மாதங்களுக்கு முன் ஆதித்யா தாக்ரே பற்றி கேலி செய்து பேசிய கங்கனா திடீரென்று மும்பையை காலி செய்து விட்டு மனாலி சென்று தங்கினார். சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக கங்கனா சில கருத்துக்களைக் கூறியதால் அவரை மும்பை போலீஸ் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கேட்டது. இதற்கிடையில் தான் மனாலிக்கு சென்று விட்டதாகவும் தேவையென்றால் அங்கு வந்து விசாரணை நடத்துங்கள் என்றும் கங்கனா கூறினார்.

கங்கனாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ள நிலையில் நாளை மும்பை வருவதாக கங்கனா தெரிவித்திருக்கிறார். இதனால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் மும்பையில் கங்கனா கட்டி இருக்கும் மணிகர்ணிகை பட நிறுவன கட்டிடத்தில் சட்டவிரோதமாகக் கட்டுமானம் கட்டப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அந்த கட்டித்தின் முகப்பில் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. உரிய விளக்கம் தரப்படாத நிலையில் அல்லது அந்த கட்டுமானங்களுக்கு உரிய அனுமதி வாங்காத நிலையில் கட்டிடத்தை நகராட்சியினர் இடித்துத் தள்ளுவார்கள் என்று கூறப்படுகிறது.


More Cinema News

அதிகம் படித்தவை