ஃபேஸ்புக்கில் நேரலை இசை நிகழ்ச்சிக்கு இளையராஜா ஆதரவு..

Music Program On Sep 12 Online To Help for Poor Musician and Singers

by Chandru, Sep 9, 2020, 14:13 PM IST

பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர் களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால், கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதற்காக யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்ற அமைப்பு ஒரு குரலாய் எனும் 6 மணி நேர இன்னிசை நிகழ்ச்சியை முகநூலில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.


செப்டம்பர் 12-ஆம் தேதி (12.09.2020) முகநூலில் (ஃபேஸ்புக்) நேரலையாக நடைபெற உள்ள இந்த இசை நிகழ்ச்சி யில், பிரபல பாடகர்கள், இசையமைப் பாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங் கள் பலரும் பங்கேற்று பங்கேற்பாளர் களுடன் உரையாட உள்ளனர்.


அண்மையில் நடிகர்கள் விஜய்சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் இந்த இசை நிகழ்ச்சியின் போஸ்டரை வெளியிட்டு, பாதிக்கப்பட்டுள்ள இசைக் கலைஞர்க ளுக்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள் ளனர். பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் எனும் இந்த இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தில், பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், சுஜாதா மோகன், ராகுல் நம்பியார், ரஞ்சித் கோவிந்த், ஹரிசரண், சைந்தவி ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர்.


இந்த இசை நிகழ்ச்சிக்கு முகநூல் நிறுவனம் தங்களது முழு ஆதரவையும் வழங்க உள்ளது. சில்வர் ட்ரீ (Silver Tree) நிறுவனம் இந்த நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்துள்ளது. இதற்கு, ஊடகா (Oodagaa) நிறுவனம் டிஜிட்டல் ஆதரவு அளிக்க உள்ளது. அதேபோல், இன்சைடர் டாட் இன் (insider.in) என்ற வலைதளம் நிதி திரட்ட உதவியுள்ளது.


ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள இசைக் கலைஞர்களுக்கு உதவும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சியை இசைஞானி இளைய ராஜா வெகுவாகப் பாராட்டியுள்ளார். பாடகர்களின் இந்த முயற்சியை தான் ஆதரிப்பதாகவும், இந்த மகத்தான காரணத்திற்காக நன்கொடை வழங்கவும் பொதுமக்களை கேட்டுக்கொண்டிருப்ப தாக இசை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஃபேஸ்புக்கில் நேரலை இசை நிகழ்ச்சிக்கு இளையராஜா ஆதரவு.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை